பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

365


பண்டுஅறிவாரா உருவோடு, என்அரைத் தொன்றுபடு துளையொடு பருஇழை போகி 1 O

நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி, விருந்தினன் அளியன், இவன் எனப் பெருந்தகை நின்ற முரற்கை நீக்கி; நன்றும் - அரவுவெகுண்டன்னதேறலொடு, சூடுதருபு, நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே, “15

இரவி னானே, ஈத்தோன் எந்தை; அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும், இரப்பச் சிந்தியேன், நிரப்படு புணையின்; உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன், நிறைக்குலப் புதவின் மகிழ்ந்தென னாகி, 2O

ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை, ஞாங்கர் நெடுமொழி பயிற்றித், தோன்றல் செல்லாது, என் சிறுகிணைக் குரலே.

ஞாயிறு மறைந்து சிலபோது கழிந்தபின், அவனுடைய நன்மனை நெற்கரிசையின் அடியிலே நின்று, தடாரிப் பறையை இசைத்துப் பாடினேன். இமைத்தகண் விழிக்கும் அளவிலே விரைவாக இருள்நீங்கக் கிழக்கே மதியமும் எழுந்தது. என் நிலையை அறிய முடியாதவாறு மாறியிருந்த என் உருவத்தையும், நைந்து கிழிந்த என்று கந்தல் உடையையும் அவன் கண்டான். ‘விருந்தினன், அளியன் இவன்’ என் உணர்ந்தான். என் கைத் தாளத்தைத் தான் வாங்கிக் கொண்டு, கள்ளும் சூடான இறைச்சியும் தந்து, என் வறுமை தீரச் செல்வமும் அவ்விரவிலேயே வழங்கி, என்துயர் தீர்த்தான்.அவனே என் தலைவன்! என் வறுமை தீர்த்த தெப்பமாக அவன் விளங்கினான். ஆகவே, அன்றோடு இனியும் பிறர்பாற்சென்று இரப்பதை யான் சிந்தித்தும் அறியேன். பிறர் உள்ளத்தில் நிகழ்வனவற்றை உள்ளத்தாலேயே அளந்தறியும் புலமைச் செவ்வியுடையேன் யான். நிறைகுளத்தின் வாயிடம் போல மகிழ்ந்தது என் உள்ளம். இரவலர் வரையாத வள்ளி யோரின் கடைத்தலையிலே நின்று, அவர் புகழ் பாராட்டி ஒன்றைப் பெற என் மனம் இனிமேல் இசையாது! என் கிணைப் பறையின் ஒசையும் இனிமேல் ஒலிக்காது!

377. நாடு அவன் நாடே!

. பாடியவர்: உலோச்சனார். பாடப்பட்டோன். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி. திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.