பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

371


அளவுபு கலந்து, மெல்லிது பருகி, -

விருந்துஉறுத்து, ஆற்ற இருந்தென மாகச் சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு? என, 5

யாம்தன் அறியுநமாகத் தான் பெரிது அன்புடை மையின், எம்பிரிவு அஞ்சித் துணரியது கொளாஅ வாகிப், பழம்ஊழ்த்துப், பயம்பகர் வறியா மயங்களில் முதுபாழ்ப் பெயல்பெய் தன்ன, செல்வத்து ஆங்கண் 10 ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச், சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி, விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின் இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு 15

தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால், இருநிலம் கூலம் பாறக், கோடை வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச் சேயை யாயினும், இவணையாயினும், இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ! 2O

சிறுநணி, ஒருவழிப் படர்க என்றோனே - எந்தை, ஒலிவெள் அருவி வேங்கட நாடன், உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் அறத்துறை அம்பியின் மான, மறப்பின்று, இருங்கோள் ஈராப் பூட்கைக் - 25

கரும்பன் ஊரன் காதல் மகனே!

ஊனும் சோறும் வெறுத்து, இனிது எனப் பாலிலே பெய்தனவும் பாகிலே கலந்தனவுமான பானக வகைகளைக் கலந்து, மெதுவாகப் பருகி விருந்து உண்டு, அவன் காட்டிலே நெடுநாள் இருந்தோம்.எம் நாட்டிலே விழா என்று வரவும், பெருமானே! எம் விழாவுடைய நாட்டிற்குச் செல்கின்றோம் என்றனம். எம்பால் பேரன்பு உடையவனான அவன், அது கேட்டு, எம் பிரிவுக்கு அஞ்சினான். "ஈயாத மன்னர் புறங்கடையிலே நின்று நீர் நுமது துன்பம் போக்குவதாவது? புலம்பொடு நும் வருத்தத்தையும் என்றும் யாமே போக்குவோம்! வறண்ட காலத்தில் தொலைவி லிருந்தாலும் சரி, இந் நாட்டிலேயே இருந்தாலும் சரி, இங்கே உடனே வந்து சேர்ந்து விடுவீராக’ என்று, அன்புடன் கூறினான். வேங்கட மலை நாட்டுக்கு உரிய கரும்பனூரனின் காதல் மகன்; பெரியவராயினும் சிறியவராயினும் அவரைக் கரை சேர்த்து