பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

385


பொருகளிற்று அடிவழி யன்ன, என்கை ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ 5

உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து, நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து, அணங்குடை மரபின் இருங்களந் தோறும், வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி, வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் 10

வைகல் உழவ! வாழிய பெரிது, எனச் சென்றுயான் நின்றனெ னாக, அன்றே, ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை སྨང་༤ ... நுண்ணுற் கலிங்கம் உடீஇ, உண் எனத் 15

தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல் கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ, ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோண்முறை விருந்திறை நல்கியோனே -- அந்தரத்து அரும்பெறல் அமிழ்த மன்ன 20 கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.

நிலவு போன்ற வெண் கொற்றக்குடை நீழல் செய்யும் அதியர் கோமான் பொகுட்டு எழினியின் நெடிய கடைவாயிலிலே, பனிபெய்யும் விடியற்காலை நேரத்திலே, கிணைப் பறையை ஒலித்து நின்றேன். திறை கொடாத மன்னரின் மதில்களை வஞ்சனையின்றிப் பொருது அழித்துப், போர்க் களத்திலே கடும் போரியற்றிக், கழுதை பூட்டி உழுது, கவடியும் வேலும் விதைக்கும், இடையறாத போர் வெற்றி நிறைந்த வேந்தனே! நீ நெடிது வாழ்வாயாக’ என்று வாழ்த்தினேன். அப்பொழுதே, ஊருணி நீரிற் படர்ந்திருக்கும் பாசிவேர் போன்று கிழிந்த என் கந்தல் உடையைக் களைந்துவிட்டு, நேர் கரையும் மெல்லிய நூலால் அமைந்ததுமான தூய உடையைத் தந்து உடுப்பித்துப், புளிப்பேறிய கள்ளினை வள்ளத்திலே பெய்து அளித்தனன். அன்றியும், முறைப்படி ஊட்டியும் மகிழ்வித்தனன். பிறநாட்டிலிருந்து கரும்பை இந்நாட்டிற்குக் கொணர்ந்தோனின் வழித்தோன்றலான எழினியே இவ்வாறு செய்தனன். அவன் வாழ்க!

393. பழங்கண் வாழ்க்கை! பாடியவர்:நல்லிறையனார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். திணை: பாடாண். துறை: கடைநிலை.