பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

புறநானூறு - மூலமும் உரையும்


நீர்ப்பறவைகள் கலைந்து பறக்கும். அத்தகைய நல்லபல விளை நிலங்களையும், களிறுகளையும் உடைய தித்தனின் உறந்தை நகர்க்குக் கிழக்கிலே உள்ளது பிடவூர். அது வள்ளன்மையுடைய வேண்மானுக்கு உரியது. அவ்வூரில் உள்ள, அறத்தால் புகழ்பெற்ற சாத்தனுக்கு வேண்டியவர் யாங்கள்! முன்னொரு நாள், 'பெருமானே!” என மாலைப் போதில் தடாரி ஒலித்து அவன் வாயிலில் நின்றேன். என்னைக் கண்ட அவன் சிறிதும் காலம் தாழ்த்தாது, பேசவும் செய்யாது, மனைக்கண்ணுள்ள தன் மனைவியை அழைத்து, ‘என்னைப்போலக் கருதி இவனைப் பேணுக!' என்றான். அத்தகைய அன்பிற் சிறந்தானை என்றும் மறவேன். பிறரை நினைக்கவும் செய்யேன். 'உலகமெங்கும் பசியால் வாடித் துயரம் அடைந்த காலத்தினும், கொக்குநகம் போன்ற சோறும், சூடான இறைச்சியும், அளவற்றுத்தந்து உதவுகின்ற அவன் வாழ்க!' எனச் சான்றோர் வாழ்த்துவர். உள்ளதும் இல்லதும் என்று ஏதும் பாராது, வரையாது வழங்குபவன் அவனே யாவன்! அவன் திருவடிகள் வாழ்க!

396. பாடல்சால் வளன்!

Urquali: மாங்குடி கிழார். பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன். திணை: பாடாண். துறை: கடைநிலை.

(எழினி யாதனின் அருள் செறிந்த கொடைப் பண்பின் சால்பை வியந்து பாடுகின்றார் புலவர். மிகச் சுவையான செய்யுள் இது)

கீழ் நீரால் மீன் வழங்குந்து,

மீநீரான், கண்ணன்ன, மலர்பூக் குந்து;

கழிசுற்றிய விளை கழனி,

அரிப் பறையாற் புள்ளோப்புந்து,

நெடுநீர் கூஉம் மணல் தண்கால் - 5

மென் பறையாற் புள் இரியுந்து: நனைக் கள்ளின் மனைக் கோசர்

தீந் தேறல் நறவு மகிழ்ந்து

தீங்குரவைக் கொளைத்தாங் குந்து, உள்ளி லோர்க்கு வலியா குவன், 10 கேளி லோர்க்குக் கேளா குவன்

கழுமிய வென்வேல் வேளே,

வளநீர் வாட்டாற்று எழினி யாதன்

கிணை யேம், பெரும!

கொழுந்தடிய குடு என்கோ? - 15