பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

புறநானூறு - மூலமும் உரையும்


துரும்புபடு சிதாஅர் நீக்கித், தன் அரைப் புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ, 20 அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை, நிழல்காண் தேறல் நிறைய வாக்கி, யான்உண அருளல் அன்றியும், தான்உண் மண்டைய கண்ட மான்வறைக் கருனை, கொக்கு.உகிர் நிமிரல் ஒக்கல் ஆர, 25

வரையுறழ் மார்பின், வையகம் விளக்கும், விரவுமணி ஒளிர்வரும், அரவுஉறழ் ஆரமொடு, புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம். உரைசெல அருளி யோனே,

பறைஇசை அருவிப் பாயல் கோவே! 30

பாயல் மலைக்கு உரியவன் அவன். தன்பால் வந்து வேண்டும் பரிசிலர்க்கு வரையாது வழங்கும் வாய்மொழி வஞ்சன் அவனே! அவனுடைய பெருமைபொருந்திய மூதூர் இரவலர் எளிதாகச் செல்லக்கூடியதே யல்லாது, பகைவர்க்குப் புலிகிடந்து உறங்கும் மலைக்குகைபோல நெருங்கவும் அச்சம் தருவது. அவ் வூர்க்குச்சென்றேன். “பரிசிலர் கொள்கலம் நிரம்ப அரிய பொருள்கள் பலவும் வழங்குபவனே! எனக்கும் உதவுக” என்றேன். என் கந்தல் உடையை நீக்கித் தானணிந்திருந்தது ஒத்த உயர்ந்த ஆடையை எனக்கு உடுப்பித்தான். வெம்மையுடன் வறிதாயிருந்த என் கலத்திலே தெளிந்த கள்ளினை நிறைய வார்த்து உண்ணச் செய்தான். அதுமட்டுமன்று; வறுத்த மான்கறியையும், கொக்கு நகம் போன்ற முனைமுறியாத அரிசிச் சோற்றையும் என் சுற்றத் தார்க்கும் எனக்கும் உவப்புடன் அளித்தான். மேலும், தன் மார்பிலே அணிந்திருந்த விலைமதிக்க முடியாத ஆரத்தையும், தன் மேலே போர்த்திருந்த பூந்துகிலையும் வழங்கினான். வாழ்க அவன் புகழ் -

399. கடவுட்கும் தொடேன்!

பாடியவர்: ஐயூர் முடவனார். பாடப்பட்டோன். தாமான் தோன்றிக்கோன். திணை: பாடாண். துறை: பரிசில் விடை

(தோன்றிக் கோனிடம் பரிசில் பெற்றுச் செல்பவர், அவன் கொடை மேம்பாட்டைப் போற்றிக் கூறிய செய்யுள் இது. வறுமையிலிருந்து வாழ்விற்கு மாறிய வகைமையைச் செய்யுள் தெளிவாகக் கூறுகின்றது.)

அடுகள் முகந்த அளவா வெண்ணெல்

தொடிமாண் உலக்கைப் பரூஉக்குற் றரிசி

காடி வெள்ளுலைக் கொளிஇ நீழல்