பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

புறநானூறு - மூலமும் உரையும்


மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. 'மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், இயற்கை அல்லன செயற்கையின் தோன்றினும், காவலர்ப் பழிக்கும் கண்ணகன் ஞாலம் என்ற நியதியை எடுத்துக் காட்டியவர் இவர்.

வெள்ளைமாளர் 296

இவர் பாடிய இச் செய்யுள் ஏறாண் முல்லைத் துறையினை நன்கு விளக்குவது ஆகும். வெறிபாடிய காமக் கண்ணியர் 317, 302

இவர் பெண்பாற் புலவருள் ஒருவர். தெய்வமேற்று வெறியாடலை அழகுறப் பாடியதனால் இப் பெயரைப் பெற்றவர் ஆகலாம். அகநானூற்று 22, 98, நற்றிணையின் 268 ஆம்

செய்யுட்களையும் செய்வர்.

வேம்பற்றுர்க் 'குமரனார் 371

இவர் வேம்பற்றுாரினர்; இவ்வூர் பாண்டிநாட்டது. குமரன்'

என்னும் முருகப் பிரானது பெயரைக் கொண்டவர். அகநானூற்று

157ஆம் செய்யுளும் இவர் பெயரான் வழங்கும்.

ஆசிரியர் பெயர் காணாப் பாடல்கள் 244, 256, 257, 297, 307, 323, 327, 328, 333, 339, 340, 355, 361.