பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

புறநானூறு - மூலமும் உரையும்


அதியமான் நெடுமான் அஞ்சி - 87 - 95, 97 - 101, 102 - 4 158, 206, 208, 231, 232, 235, 310, 315, 390

இவன் தகடூரிலிருந்து அரசாண்டவன், குதிரை மலைத் தலைவன், மழவர் கோமான், கரும்பைத் தமிழ் நாட்டிற்குக் கொணர்ந்தோரின் வழிவந்தவன். உண்டோரை நெடுங்காலத்துக்கு உயிர் வாழ்ந்திருக்கச் செய்யும் தன்மையுடையதும், மிகமிக அரிதாகவே கிடைப்பதுமான கருநெல்லிக் கனியைப் பெற்று, அதனைத் தானுண்ணாது தண்தமிழ்ப் பெருமாட்டியாகிய ஒளவைப் பெருமாட்டிக்குக் கொடுத்துப் புகழ் பெற்றவன். சேரர் குடும்பத்தைச் சார்ந்தவன். வள்ளல்களுள் ஒருவனான மலையமானைச் சோழர் துணையோடு வென்று புகழ் பெற்றவன். மற்றும் பலரையும் வென்று தன் மறமேம்பாட்டால் பலரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு வாழ்ந்தவன். ஒளவையார், பரணர், பெருஞ்சித்திரனார், பொன் முடியார், அரிசில் கிழார் என்னும் புலவர் பெருமக்கள் இவனைப் போற்றிப் பாடியுள்ளனர். இவனுடைய பெருகி வந்த புகழால், இவனை ஒழிக்கக் கருதியோர் பலர். அவருள் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்பான் இவனை வென்று தகடுரையும் அழித்தனன். தகடுர்ப் பெரும்போர் அந் நாளைத் தமிழகத்தையே பெரிதும் கலக்கியது: "தகடூர் யாத்திரை" என்னும் ஒரு நூலே எழுவதற்கு காரணமாயிருந்தது. இவன் மிக்க வலிமையாளன் என்பதனை மிகவும் தெளிவாக, 'ஒருநாள் எட்டுத் தேரைச் செய்யும் தச்சன் ஒரு மாத முற்றும் கருதிச் செய்யப்பட்டதொரு தேர்க்காலை ஒப்பவன்' என்பார் ஒளவையார். ‘முழவுத் தோள் என்னை' எனவும், 'எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக்கை, வழுவின் வன்கை மழவர் பெரும எனவும் பலவாறாகப் போற்றிப் பாடுவர் ஒளவையார். நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும என்று வாழ்த்தினார் ஒளவையார்; அவர் வாக்குப் பொய்யா வாக்கு அதியனின் புகழ் என்றும் நின்று நிலவும். தகடூர் யாத்திரை என்னும் எம் நூலினுள் இவன் வரலாற்று விரிவைத் தெளிவாகக் காண்க.

அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொருட்டெழினி –96, 102,392

இவன் கொடையும் வென்றியும் ஆகிய சிறப்புக்களை உடையவன். இவனைப் பாடியவர் ஒளவையார். நெடியோய்! திங்கள் நாள்நிறை மதியுத்து அனையை இருள் யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே?' என்று (103) இவனைப் போற்றுவர் ஒளவையார். இவனுடைய போர் மறத்தையும் இவரே பாடியுள்ளனர். இதனால், தகடூரது அழிவுக்குப் பின்னர் இவன் மீளவும் தன் நாட்டைப் புகழுடன் செப்பனிட்டு ஆண்டுவந்தவன் என்பது விளங்கும்.