பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460

புறநானூறு - மூலமும் உரையும்


னாகவும் திகழ்ந்தவன். பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோடு பொருது தோற்றுக் கட்டுப் பட்டுப் பின் மீண்டும் நாடாண்டவன். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போரிட்டவன். சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை எனவும் இவன் பெயர் வழங்கும். தொண்டி இவனுக்கு உரிய பட்டினம். விளங்கில் ஊரார்க்குப் பகைவரால் வந்துற்ற துயரைப் போக்கியவன். கபிலரின் நண்பனாக விளங்கியவன். அதனாற் பாரிவள்ளலின் காலத்தவன் எனலாம். முருகப் பெருமான் சூரனை வெல்வது குறித்துப் பிணிமுகம் என்னும் போர்க்களிற்றின் மீது அமர்ந்தவனாகச் சென்றனன். இவன் சென்ற காட்சியைக் கண்டு வியந்தவர், இவனையும் முருகனோடு ஒப்பிட்டு, 'யானைக்கட்சேய்' என்பாராயினர் போலும். பாண்டியனிடமிருந்து இவன் முயற்சியோடு தப்பிச் சென்று மீளவும் அரசு கட்டிலேறிச் சிறந்த வரலாற்றைக் (17) குறுங்கோழியூர் கிழார் பாடியுள்ளனர். இவனது காவற் சிறப்பையும் இவர் பாடியுள்ளனர். ஐம் பெரும் பூதத்து இயற்கையை அளந்தறியினும் அறியலாம்; நின்னை அளந்து அறிபவர் யாவர்? அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும் உடையாய் என்கின்றனர் புலவர் (20). இவனாற் காக்கப்பட்ட நாட்டைப் போல்வதொரு இன்பநலம் செறிந்த நாடு புத்தேளுலகத்தும் இல்லை எனவும் போற்றுகின்றனர் (22). இவன் சோழனோடு பொருது தோற்ற காலையிற் சோழர்க்குத் தேர்வண் மலையன் துணையாக அமைந்து வெற்றித் தேடித் தந்தான் என்பர் (125). இவன் இன்ன நாளில் துஞ்சுவன்’ என அஞ்சி, அவ்வாறே இவன் துஞ்சிய போது வருந்திப் பாடிய செய்யுளில் கூடலூர் கிழார், இவனை இழந்ததனால் நாட்டுக்குற்ற அவலத்தை எடுத்துக் கூறுகின்றனர் (229).

கோப்பெருஞ் சோழன் - 67, 191, 212 - 223

இவன் உறையூரிலிருந்து ஆட்சி நடத்திய சோழ மன்னருள் ஒருவன். இவனைக் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், நத்தத்தனார், பிசிராந்தையார், புல்லாற்றுார் எயிற்றியனார், பொத்தியார் முதலியோர் பாடியுள்ளனர். புலவர்களோடு மிகமிக நட்புரிமை கொண்டு பழகிய பெருந்தகையாளன் இவன். மற மாண்பும், தமிழ்ச் செறிவும், கொடைப் பண்பும் கொண்டவன். இவன் மக்கள் இவனுக்குப் பகைவராயினர். அவரைப் பொருது அழிகக முனைந்த இவனைச் சான்றோர் தடுத்துத் துறவு நெறிக்குச் செலுத்த முயன்றனர். ஆயின் இவனோ, வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான். இஃதறிந்த பிசிராந்தையார் தானும் பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டு வந்து உடனமர்ந்து உயிர் நீத்தனர். பொத்தியாரும் உயிர்விடத் துணிய, 'நீ மகன் பிறந்த பின் வா’