பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

485


485

முதுபாலை: காட்டிடத்துத் தன் கண வனை இழந்தாளான, ஒரு மடந்தை யது தனிமையைச் சொல்லுதல் (பு.வெ.மா.254); 253-6.

முதுமொழிக் காஞ்சி : அறிவாளர் முடிந்த பொருளாகிய அறம் பொருள் இன்பத்தை அறியச் சொல்லுதல் (பு. வெ. மா. 269); முப்பொருளினது உறுதியாம் தன்மையை உரைத்தல்; 18, 27-9, 74. மூதின் முல்லை : மறக்குடி மக ளிர்க்கும் சினமுண்டா தலை மிகுத்துச் சொல்லுதல் (பு. வெ. மா. 175); 279, 288,306, 308, 312. வஞ்சினக் காஞ்சி : பகைவரைத் தாழ்வித்தற் பொருட்டு இவ்வாறு செய்வேன் என அரசன் ஒருவன் சொல்லிய கூறுபாட்டைச்சொல்லுதல் (பு.வெ.மா. 6).71-73. வல்லாண் முல்லை. வீரன் ஒருவனது வீட்டையும் ஊரையும் இயல்பினையும்

சொல்லி, அவனது ஆண்மைத் தன்மையைத் தன்மைபெருகச் சொல்லுதல் (பு. வெ. மா. 177) 170, 172–82, 313, 326-35. - வாண்மங்கலம்: அரசனுடைய வாளைப்புகழ்தல்(பு.வெ.மா.223);95 வாழ்த்தியல் : தலைவனை வாழ்த்தி உரைத்தல் 2, 3, 6, 13, 91, 158, 367, 375, 377,385 - 7. வாழ்த்து: தலைவனது கொடை யையும் வெற்றியையும் கூறிப் பாராட்டுதல்; 128. விறலியாற்றுப் படை : அரசனுடைய புகழைப் பாடும் பாடினியை வழிப்படுத்துதல் (பு.வெ.மா.219);64, 103,105,133.

வேத்தியல் வீரர் அரசனது மேம்பாட்டைக் கூறுவது வேத்தியன் மலிபு எனவும் வழங்கும். (பு. வெ. மா. 34); 286,291.