பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μωμπάααθεά - 67

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன், கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன், - நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்நேர்; நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; ஒருவீர் தோற்பினும், தோற்பதும் குடியே 5

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்தி, கொடித்தேர் நூம்மோர் அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!

நின்னை எதிர்த்து நிற்பவன் பனம்பூச்சூடிய சேரன் அல்லன்: வேப்பந்தார் அணிந்த பாண்டியனும் அல்லன். நின் கண்ணியும், நின்னுடன் போரிடுவோன் கண்ணியும் ஆத்திப் பூவால் ஆயினவே. ஆகவே, ஒருவர் தோற்றாலும் தோற்பது நும் சோழர் குடியே அல்லவோ இருவரும் வெற்றிபெறுவதும் இயல்பன்றே அதனால் தும் செயல் குடிப் பெருமைக்குத் தக்கதன்று. நும்போன்ற வேந்தர்க்கு உடம்பு பூரிக்கும் அளவு நகையுண்டாக்குவதே நீவிர் இயற்றும் போராகும். (ஈண்டு, இருவரையும் புலவர் இடித்து உரைக்கும் நயம் சிறப்புடையது) -

சொற்பொருள்: இரும்பனை வெண்தோடு மலைந்தோன் - சேரன். 2. கருஞ்சினை வேம்பின் தெரியலோன் - பாண்டியன். 3. ஆர்மிடைந்தன்று - ஆத்தியால் செறியக்க்ட்டப்பட்டது. 7. குடிப்பொருள் அன்று - தும் குடிக்குத் தக்கது ஒன்றன்று. 9. மெய்ம்மலி உவகை - உடம்பு பூரிக்கும் உவகை 46. அருளும் பகையும்! பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி. குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது. - -

(அவரைக் கொல்லாமல் படிக்குச் சந்துசெய்து காத்தலின் இது துணை வஞ்சி ஆயிற்று. துணை வஞ்சித் துறைக்கே இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (புறத். சூ7) இப் பாட்டு மேற்செலவின்கண் அடங்காமையின் துணைவஞ்சியன்று என்றும், பாடாண்திணைச் செய்யுளே என்றும் உரைப்பர் நச்சினார்க் கினியர் (தொல், புறத். சூ. 8 உரை) - - t

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!