பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

81


உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; அதனால் நல்ல போலவும், நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும், - 25

காதல் நெஞ்சின்தும் இடைபுகற்கு அலமரும் ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது இன்றே போல்க நும் புணர்ச்சி; வென்று வென்று அடுகளத்து உயர்க நும் வேலே கொடுவரிக் கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி 30

நெடுநீர்க்கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே.

நீயோ, குளிர்நீர் நிரம்பிய காவிரிக்குத் தலைவன்; இவனோ, தன் குடியின் பழைய பெருமையை நிலைநாட்டத் தன் இளவயதிலேயே பகைவரை வென்ற புகழ்மிக்க பாண்டியன். நீ அறம் விளங்கும் உறையூர் மன்னன்; இவனோ, நெல்லும் நீரும் யாவருக்கும் எளிதில் கிடைப்பன எனக் கருதிப், பொதியத்துச் சந்தனமும் ஆழ்கடல் முத்தும் கொண்டு, மும்முரசமும் முழங்கத் தமிழ் மதுரையிலே ஆட்சி நடத்தும் செங்கோல் வேந்தன். நீவிர் இருவீரும், பால்நிறப் பனைக்கொடியேனும் நீலவண்ணத் திருமாலும் போல ஒருங்கே இருக்கின்றீர். அஞ்சும் வலியுடைய இருவ்ரும் இவ்வாறு இருப்பதைக் காண்பதிலும் இனியது எமக்கு வேறு உளதோ? நீங்கள் ஒன்றுபட்டவராக விளங்கினால், கடல் சூழ்ந்த பயன் தரும் உலக முழுதும் நும் கைப்படும் என்பது உண்மை! எனவே, நும் புகழ் ஓங்குக! நீங்கள் ஒருவர்க்கொருவர் உதவுக! நல்லன போலவும், நியாயம் உடையன போலவும், பழையோர் ஒழுகிய ஒழுக்கம் போலவும் நீங்கள் இருக்கவும், நும் அன்பு நெஞ்சத்தை இடைபுகுந்து பிரித்தற்கு முயலும் அயலோரின் சிறப்பற்ற சொற்களைக் கேட்டுவிடாதீர்கள்! இன்று போலவே என்றும் இணைந்தே வாழுங்கள்! வெற்றிமேல் வெற்றி பெற்று நீங்கள் உயர்க! நும் வேல் வெல்க! பகைவர் நாடுகளில் நும் புலிக்கொடியும் மீன் கொடியும் பொறிக்கப்படுக அவை நுமக்கு. அடிப்படுவதாக! -

சொற்பொருள்: 2. கோளி - பூவாது காய்க்கும் மரம். 4. துளங்கல் செல்லாது - தான் தளராது. 5. நடுக்கு அற தடுமாற்றம் அற. 6. கிளை அரா சுற்றத்துடன் கூடிய பாம்பை, நரை உருமின் வெள்ளிய இடியேறு போல. 8. பஞ்சவர் - பாண்டியர். 10. எளிய - எளிய எனக் கருதி.1.திரைய - கடலிடத் துண்டான.17. உரு- உட்கு: