பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

83


முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச், செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் உச்சி நின்ற உவவுமதி கண்டு, கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த, சில்வளை விறலியும் யானும், வல்விரைந்து. 5 தொழுதனம் அல்லமோ, பலவே கானல் கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன், - வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன், 10

வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின் மாலை வெண்குடை ஒக்குமால் எனவே!

மீன்படகின் விளக்குப் போல, வான் நடுவே செவ்வாய் மீன் விளங்கும் அப்போது, உச்சியிலேதோன்றும் முழுநிலவைக் கண்டு காட்டுமயில்கள் மகிழ்ந்து ஆடும். அதைப் போல, இடைச் சுரத்திலே வந்து கொண்டிருந்த யானும், சிலவான வளைகளை அணிந்த விறலியும், அம் மதியை விரைந்து தொழுதோமே! கடலுப்பு ஏற்றிய பாரமிக்க வண்டியை மலை நாட்டை நோக்கி இழுத்துச் செல்லும் பகட்டினைப் போல, ஆட்சிச் சுமையைத் தாங்கி நடத்திச் செல்லுபவன் எம் கோமானான வளவன். வெற்றி முரசினையும் தப்பாத வாளினையும் உடைய அவ் வளவனுக்கு, வெயில் மறைக்க எடுத்த வெண்கொற்றக் குடைபோல்வது என்று எண்ணி, அன்றே மதியினைத் தொழுத எமக்கு, இன்று அவன் குடையினைத் தொழச் சொல்லுதலும் வேண்டுமோ!

சொற்பொருள்: 2. செம்மீன் - செவ்வாய்மீன்; திருவா திரையும் ஆம் 4 கட்சி - காடு. சுரமுதல் சுரத்திடை முதல், ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு. 7. மடுக்கும் - நோக்கிச் செல்கின்ற. 8. ஆரை - ஆரைக்கால் சாகாடு - வண்டி 10, இரங்கு முழங்கும்.

61. மலைந்தோரும் பணிந்தோரும்

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார். பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. திணை: வாகை. துறை: அரச ᎧJfᎢ©Ꮬ. -

(அரசனது வெற்றி மேம்பாட்டை, மலைந்தோர் வாழக் கண்டன்றும் இலமே, தாழாது திருந்தடி பொருந்த வல்லோர் வருந்தக் காண்டல் அதனினும் இலமே' எனப் பாடுதலால் இது அரச வாகை ஆயிற்று) -