பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் ஏவறைகளையுடைய மதிலிலே ஏணியைச் சாத்தியது, ஏணி நிலை ஆகும். இஞ்சி-மதில். - கற்பொறியும் பாம்பும் கனலும் கடிகுரங்கும் விற்பொறியும் வேலும் விலக்கவும்-பொற்புடைய பாணி நடைப்புரவிப் பல்களிற்றார் சாத்தினார் ஏணி பலவும் எயில். 112 பொலிவினை உடையவும், தாளத்திற்கு ஒப்பச் சதிபாயும் தன்மையவும் ஆகிய குதிரைகளையும், பலவான களிறுகளையும் உடையவர் உழிஞை மறவர்; இவர்கள் இடங்கணியும் அரவும் நெருப்பும் கடிக்குங் குரங்கும் விற்பொறியும் வேலும் ஆகிய நொச்சியாரது படைக்கலன்கள் எல்லாம் தம்மை அணுகவிடாது விலக்கவும், அவற்றை மேற்கொண்டு, பகைவரது மதிலிடத்தே ஏணிகளைச் சாத்தினார். - கற்பொறி-பெருங் கற்களை வீசி எறியும் பொறி, இதன்ை இடங்கணி என்பர். பிறவும் பகைவரை மதிலை அணுகவிடாது தாக்கும் எந்திரப் பொறிகள் ஆம். இப்பொறிகளும் இன்னன. பலவும் அரணிடத்து அமைதலைச் சிலப்பதிகாரத்தானும் அறியலாம். (காதை 15.207.17). ஏணிகளை நிலைபெறுத்துதலால் ஏணிநிலை ஆயிற்று. இதனையும், அடுத்து வரும் எயிற்பாசி என்பதனையும், ஏணிமிசை மயக்கம் என்பர் தொல்காப்பியர் (புறத். சூ.13) - - - 18. எயிற் பாசி உடல்சினத்தார் கடியரணம் மிடல்சாய மேலிவர்ந்தன்று. முனைகின்ற சினத்தினை உடையவரான உழிஞை மறவர், காவலையுடைய பகைவரது அரணத்தின் வலியழியும்படியாக ஏணிமேல் ஏறியது, எயிற்பாசி ஆகும். . . . . சுடுமண் நெடுமதில் சுற்றிப்பிரியார் கடுமுரண் எஃகங்கழிய-அடுமுரண் ஆறினா ரன்றி அரவும் உடும்பும்போல் - ஏறினார் ஏணி பலர். - 113 செங்கல்ாற்செய்த நெடிய மதிலினைச் சூழ்ந்து நீங்காதவராய், கொடிய மாறுபாட்டினையுடைய வேல் தமது மார்பிடத்தே தைத்து ஊடுருவிப் போக, அதனால் பட்டு வீழ்ந்து, தம்முடைய கொல்லுதற்கான மாறுபாட்டினின்றும் நீங்கினாரே யல்லாமல், பலரான பிறரெல்லாம், பாம்பும் உடும்பும் போலப் பிடி தளரவிடாது ஏணிமேல் ஏறினார்கள். - • .