பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-உழிஞைப்படலம் 105 போன்ற மென்மையான தோளினையும், பசிய மாந்தளிர் போன்ற மேனி வனப்பையும் பாராட்டியவனாகத் தன் தந்தையது மதிலின்புறத்தே தங்கும் தனிமைத் துயரையே கொடாநிற்கும்! இதனால், அவளை நினைந்து உழிஞை வேந்தன் மதிற் புறத்துத் தன் பாடி வீட்டிலே இருந்து வருந்துவானாயினான் என்பதும் கூறினர். புலம்பு-வருத்தம் . மறமதில் மன்னன் என்றது நொச்சியானை தன் அரணாகிய மதிலை இழந்தாலும், மறமாகிய மதிலினை அவன் உடையவனாக இருந்தான் என்பது கருத்து. 29. திறைகொண்டு பெயர்தல் அடுதிறல் அரணத் தரகவழி மொழியப் படுதிறை கொண்டு பதிப்பெயர்ந்தன்று. கொல்லும் திறனாலே மிகுந்தவனான வேந்தன், எயிலினிடத்து அரசர் எல்லாம் தாழ்வு சொல்லிப் பணிய, அவர் தந்த முறையான திறையைக் கொண்டு, தன் பதிக்குப் பெயர்தல், திறைகொண்டு பெயர்தல் ஆகும். - கோடும் வயிரும் இசைப்பக் குழுமிளை ஓடெரிவேய உடன்றுலாய்ப்-பாடி உயர்ந்தோங் கரணகத் தொன்னார் பணியப் . பெயர்ந்தான் பெருந்தகையி னான். 124 - பெருந்தகைமையினை உடையவனான உழிஞை வேந்தன், சங்கினமும் கொம்பினமுமஆரவாரிக்கத்தன் பகைவரது செறிந்த குறுங்காட்டைப் பரந்த எரிமூடும்படியாகச் சினந்து கிளர்ந்து, மிகவுயர்ந்த மதிலகத்தாரான பகை மன்னர் தன்னைப் பணிந்தமையானே, தான் தன் பாடியிருக்கையினின்றும் நீங்கித், தன் பதிக்குப் பெயர்ந்து போயினான். - மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக் கொடுத்தளித்துக் குடியோம்பின தான குறுவஞ்சித்துறைக்கும், இதற்கும் உளதான நிலைவேறுபாட்டைநினைவிற்கொள்க.பெருந்தகை,பேரழகும் - - 30. அடிப்பட இருத்தல் பேணாதார் மறங்கால . ஆணைகொண்டடிப்படவிருந்தன்று. பகைவரானவர், உழிஞை வேந்தன் சினத்தை உமிழ, அவனது ஆணையை ஏற்றுக்கொண்டு, அவனுக்கு அடிப்பட்டவராக இருந்தது. அடிப்பட இருத்தல் ஆகும்.