பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் டதும்பைப்படலம் 109 7. தும்பைப் படலம் (தும்பை என்பது, அகத்திணையுள் நெய்தலுக்குப் புறனாக விளங்கும் புறத்திணைப்பகுதியாகும்.'மண் இடையீடாகப்பொரும் வஞ்சிக்கும், மதில் இடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பின்னர், மைந்து பொருளாகப் பொரும் தும்பையாகிய இது கூறப்படுகிறது . என்பது, நச்சினார்க்கினியரது விளக்கம். இதனை மனத்திற்கொண்டே இப்பகுதியினைக் கற்றல் வேண்டும். காடும் மலையும் கழனியும் அல்லாத, களரும் மணலும் இதற்குப் பொருகளமாதல் வேண்டும். வீரக் குறிப்பின் அருள்பற்றி ஒருவர் ஒருவரை நோக்கிப் போரின் கண் இரங்குபவாதலானும், ஒருவரும் ஒழியாமற் பட்டுழிக் கண்டோர் இரங்குபவாதலானும், பிறகாரணங்களானும், இது நெய்தற்குப் புறனாகக் கூறப்பெறுவதாயிற்று. இது மைந்து பொருளாக, அதாவது தனது வலிமையினை உலகம் மிகுத்துப் போற்றுதல் ஒன்றே தனக்குப் பெறுபொருளாக, இருசாராரும் பொருதல் ஆகும்.இதனையும் நாம் கவனத்திற்கொண்டு, இப்பகுதியைக் கற்றறிதல் வேண்டும்) துன்னரும் கடும்போர்த் தும்பைதும்பையரவம் தன்னிகர் இல்லாத்தானை மறமே யானை மறத்தொடு குதிரை மறமே தார்நிலை தேர்மறம் பானது பாட்டே இருவரும் தபுநிலை எருமை மறமே ஏம எருமை நூழில் என்றா நூழி லாட்டே முன்தேர்க் குரவை பின்தேர்க் குரவை பேய்க்குரவையே களிற்றுடனிலையே ஒள்வாள் அமலை தானை நிலையே உவகைக்கலுழ்ச்சி. தன்னை வேட்டல் தொகைநிலை உளப்பட நன்பொருள் தெரிந்தோர் நாலிரு மூன்றும் வண்பூந்தும்பை வகையென மொழிப. (7) மறமாண்பு ஒன்றே பொருளாகக் கருதிமேற்கொள்ளுவதான் இந்தத்தும்பை என்னும் ஒழுக்கம், இருபத்து மூன்று துறைகளாக இயலும் என்று, நன்மையான பொருளது வேறுபாட்டை அறிந்தோரான சான்றோர் உரைப்பார்கள். அவற்றுடன் திணையும் கூட்டி, இத் திணைப்பகுதி இருபத்து நான்காக உரைக்கப்படுவதாகும். ... •