பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ччигасаған • азамаш-ов 111 தலையளி பண்ணலாவது, வரிசையறிந்து பொருள் நல்கி மகிழ்வித்தல். இதன்போது ஆரவாரம் எழுதல் இயல்பாதலால், இது தும்பை அரவம் ஆயிற்று. . . வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் கொல்களிறும் மாவும் கொடுத்தளித்தான்-பல்புரவி நன்மணித் திண்தேர் நயவார் தலைபனிப்பப் பன்மணிப் பூணான் படைக்கு. . 128 பல மணிகள் அழுத்தின அணிகலன்களை அணிந்தோனான வேந்தன், பலவாகிய குதிரைகளையும் நன்றாகிய மணிகளையும் திண்ணியவான தேர்களையும் உடையவரான தன் பகை வேந்தர்கள் தலைநடுங்கும்படியாகத்தன்படையினருக்குப்போர் வெல்லுதற்குரிய அடையாளமும், பலவூர்களை யுடைய சிறு நாடுகளும், சிறந்த பொருளும், மருத நிலங்களும், கொல்லும் களிறுகளும், குதிரைகளும் கொடுத்து அவர்களுக்கு அருளுதலைச் செய்தான். . * - - - வெல் பொறி - வெல்லுதற்கான அடையாளம் நாடு-பற்றுபலவூர்களையுடைய சிறுநாடு, மருதநிலம்-விளைவயல், - 2. தானை மறம்-1 தாம்படைத் தலைக்கொள்ளாமை ஒம்படுத்த உயர்புகூறின்று. பொருதற்கு எதிரிட்ட படைகள் இரண்டும், தாம் போர் செய்து அழிந்து படாமற்படிக்கு, தம்முள் போரை விலக்கிப் பாதுகாத்த உயர்ச்சியைக் கூறுவது, தானைமறம் ஆகும். போரிடின் இருபடையும் அழிவெய்தும் அளவிற்கு நிகரான வலியுடையன; ஆதலின், அதனைக் கருத்திற் கொண்டு ஒம்படுத்த உயர்பாகிய இது, தானைமறம் ஆயிற்று. கழுதார் பறந்தலைக் கண்ணுற்றுத் தம்முள் இழுதார்வேற்றானை இகலிற்-பழுதாம் . செயிர்காவல் பூண்டொழுகும் செங்கோலார் செல்வம் உயிர்காவல் என்னும் உரை. 129 'குற்றத்தை உலகிற் புகுதாமற் காத்தொழுகும் காவலைப் பூண்டு நடக்கின்ற செங்கோன்மையினை உடையவர்களின் செல்வமாவது, பலஉயிரையும் காத்தல் என்பது ஆன்றோர்களின் உரை, நெய்யணிந்த வேலினையுடைய படையானது, பேய்கள். மிகுந்த போர்க்களத்தை அடைந்து, தம்முள்ளே மாறுபட்டுப் போரிடப் புகுந்தால், அந்த ஆன்றோர் உரைக்குக் குற்றமாம்.