பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் : စ္စuပ္ படலம் - 127 மகளிருக்கக் கற்புடைமையினைக் காட்டினும் சிறந்த தொன்று யாதுமில்லை. வாயிற் கடையினைக் கடந்து, குடிப்பிறப்பும் நாணமும் தன்னிடத்தைவிட்டு நீங்க, நல்ல போரினிடத்தே பட்டமறவர்கள் கிடந்த கொடிதான களத்தினை - விரும்பித் தன் ஆருயிரான கணவனைக் காணும் பொருட்டாக, நுடங்கும் இடையினை உடையாள், தமியளானவராநின்றனளே! ஆருயிரைக் காண்பான் என்றது, தன் உயிரைக் கொண்டு அவனுயிரைத் தேடிக் காண்பாள் போல உயிர்விடற்கு முற்பட்டுத் துணிந்தாளாக என்பதாம். மறவர் உடலங்கள் கிடந்த களத்தின் கொடுமையினை, நற்போர் அணங்கிய வெங்களம் எனக் குறித்தனர். குலமகளாகிய அவள் கொடிய போர்க்களத்தே சென்றது, தன் உயிரையும் கணவனது உயிரொடு விடுதல் பற்றி, ஆதலின் இது, தன்னை வேட்டல் ஆயிற்று. 27. தொகை நிலை அழிவின்று புகழ்நிறீஇ ஒழிவின்று களத்தொழிந்தன்று. உலகிடத்தே என்றும் அழியாதபடி தம்முடைய புகழினை நிலைபெறுத்தியவராகப், போரிடத்தே எதிர்ந்த வேந்தர் இருவரும்,தம்மில் ஒருவரும் ஒழியாமற்படிக்குக் களத்திலே பட்டு வீழ்தல், தொகை நிலை ஆகும். உழிஞைத் தொகைநிலைக்கும் இத் தும்பைத் தொகை நிலைக்கும் வேறுபாட்டைக் கருதி உணர்க. அது, உழிஞையானின் வெற்றிகண்டு அஞ்சிய வேந்தர் பலரும் தொகையாக வந்து அவன் திருவடிசேர்தல்' இது,"பொருதிய இருதிறத்துவேந்தரும் ஒருங்கே களத்திற் படல். இதனை வாள் வாய்த்து இருபெரு வேந்தர் தாமும், சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகை நிலை என்பர் தொல்காப்பியர் (புறத். சூ.17) - மண்டமர்த் திண்தோள் மறங்கடைஇ மண்புலம்பக் கண்டிரள்வேல் மன்னர் களம்பட்டார்-பெண்டிர் கடிதெழு செந்தீக் கழுமினார் இன்னும் கொடிதேகாண் ஆர்ந்தின்று கூற்று. 154, செறிந்த போரினிடத்தே, திண்ணிய தோளாற்றலால் மாறுபாட்டைச் செலுத்தி, மண்ணகம் தனிமைப்பட்டுப் புலம்புமாறு, காம்பு கண்திரண்ட வேலினையுடைய இரு மன்னர்களும் களத்தே இறந்துபட்டனர். அவர் பெண்டிரும் விரைந்தெழுகின்ற சிவந்த தீயிடத்தே புகுந்து நிறைந்தனர்; இன்னும் வயிறு நிரம்பியதன்று ஆகலான், கூற்றமும் மிகக் கொடியதே காண்! - -