பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் : வாகைப்படலம் 131 கூதிர்ப் பாசறை வாடைப் பாசறை அரச முல்லை பார்ப்பன முல்லை அவைய முல்லை கணிவன் முல்லை மூதின் முல்லை ஏறாண் முல்லை வல்லாண் முல்லை காவன் முல்லை பேராண் முல்லை மறமுல்லையே குடைமுல்லையொடு கண்படைநிலையே அவிப்பலி யென்றா சால்பு முல்லை கிணைநிலையேனைப் பொருளொடு புகறல் அருளொடு நீங்கல் உளப்படத் தொகைஇ மூன்று தலையிட்ட மூவீ ரைந்தும் - - வான்தோய் வாகைத் திணையது வகையே. (8) சீர்மையாற் சிறந்தது வாகைத் திணை. இது முப்பத்திரண்டு துறைகளைக் கொண்டு நிகழும். அவை. வாகையரவம், அரச வாகை, முரச வாகை, மறக்கள வழி, களவேள்வி, முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, பார்ப்பன வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை, பொருந வாகை, அறிவன் வாகைதாபதவாகை, கூதிர்ப்பாசறை, வாடைப்பாசறை என்பனவும். - அரசமுல்லை,பார்ப்பனமுல்லை, ഷങ്ങഖlഗ്രസ്മേ, கணிவன். முல்லை, மூதின் முல்லை, ஏறாண்முல்லை, வல்லாண் முல்லை, காவன் முல்லை, பேராண்முல்லை, மறமுல்லை, குடை முல்லை, கண்படைநிலை, அவிப்பலி, சால்புமுல்லை என்பனவும். கிணைநிலை, பொருளொடு புகறல், அருளொடு நீங்கல் என்பனவும் ஆம். - - வாகைத் திணையின் விளக்கம் இலைபுனை வாகை சூடி இகன்மலைந்து - அலைகடல் தானை அரசட் டார்த்தன்று. தளிர்ானே விரவித்தொடுத்த வாகை மாலையைச் சூடி, மாறுபாட்டை மேற்கொண்டு, அலையும் கடல்போன்ற சேனையினையுடைய பகைவேந்தனைக் கொன்று ஆரவாரிப்பது, வாகைத்திணை ஆகும். - வர்கை என்பது பாலைக்குரிய ஒருமரம்போரிற்பகைவரை வென்றார், இதன் மலரைச் சூடி ஆரவாரிப்பர். அதனால், இது' வாகைத்திணை ஆயிற்று. . . .