பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 8. வாகைப்படலம் (வாகைப் படலம், போரின்கண் பகைவேந்தனையும் அவன் படைகளையும் அழித்து, மறவர்களும் அரசனும் வாகைப்பூச் சூடியவராக ஆரவாரித்துக் களிப்பதனைக் கூறுவதாகும்.) இது பாலையாகிய அகத்திணைக்குப் புறனாகக் கொள்ளப் படுவது, பாலைக்குப் புணர்ச்சியின் நீங்கி இல்லறம் நிகழ்த்திப் புகழ் எய்துதற்குப் பிரிதல் ஒழுக்கமாம். அதுபோலச் சுற்றத் தொடர்ச்சியினின்றும் நீங்கி, அறப்போர் செய்து துறக்கம் பெறுங் கருத்தினாற் செல்வதனாலும், வாளினும் தாளினும் நிறையினும் பொறையினும் வென்றியெய்துவோரும் மனையோரை நீங்கிச் செல்வதனாலும், பிரிவு இதற்கும் உளதாயிற்று. - பாலை தனக்கென ஒரு நிலமின்றி, நால்வகை நிலத்தும் நிகழும். அதுபோல, முற்கூறிய புறத்திணைகள் அனைத்தும் இடமாக இவ்வாகைத் திணையும் நிகழும் இதனை அரசர்க்கு உரியதாகக் கூறினர் இந்நூலாசிரியர். எனினும், துறைப் பகுப்புள் ஏனையோர்க்கும் உரியதாகக் காட்டுதலையும் நாம் காணலாம். இதனால், - "தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப’ (புறத். சூ.19) என்ற தொல்காப்பிய விதிப்படியே இதனைக் கொள்ளல் பொருந்துவதாகும். இதன்கண் கூறும் பாகுபட மிகுதிப்படுத்தல் என்பது, தன்னைத்தானே மிகுதிப்படுத்தலும், பிறர் மீக்கூறு படுத்தலுமாம்.இவற்றுள் உறழ்ச்சியாற் பெற்ற வென்றியை வாகை யெனவும், இயல்பாகப் பெற்ற வென்றியை முல்லை எனவும் கூறுவார்கள். இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டே இப் பகுதியினைக் கற்றல் வேண்டும்) - சீர்சால் வாகை வாகை யரவம் அரச வாகை முரச வாகை மறக்கள வழியொடு களவேள் விய்யே முன்தேர்க் குரவை பின்தேர்க் குரவை பார்ப்பனவாகை வாணிகவாகை வேளாண் வாகை பொருந வாகை அறிவன் வாகை தாபத வாகை