பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- விக் கேசிகன்-வாகைப் 139 فدھالا . . 11. பொருந வாகை புகழொடு பெருமை நோக்கி யாரையும் இகழ்தல் ஒம்பென எடுத்துரைத்தன்று. - - நினது புகழொடு நின் பெருநிலையினையும் நோக்கி, யாரையும் இகழ்தலைக்கைவிடுக' என எடுத்துக் கூறுவது பொருந 'வாகை ஆகும். - - - பொருந-ஒப்பு நோக்கிய இதனால் அவன் பிறரினும் வென்றியமைந்த சிறப்பினனாதலும் காண்க. - . வெள்ளம்போல் தானை வியந்து விரவாரை , எள்ளி உணர்தல் இயல்பன்று-தெள்ளியார் ஆறுமேல் ஆறியபின் அன்றித்தம் கைக்கொள்ளார் நீறுமேற் பூத்த நெருப்பு. 166 கடல்போன்ற தானைப் பெருக்கினை உடையோம் யாம்' என்று வியந்து, பகைவரை இகழ்ந்து அறியுமது சிறந்த இயல்பன்று; தெளிந்த அறிவாளர், பொடிமேலே முடிய தழலினை, அஃது ஆறுவதாயின் முற்றமும் ஆறியபின், அல்லாது, தங்கள் கையின்கண் ஏந்தமாட்டார். - ,விரவாரை எள்ளி உணர்தல் இயல்பன்று என உரைத்தமை خر அங்ங்னம் உணர்தற்குரிய வெற்றிச் செவ்வியன் அவன் என்றதனால், அவன் செருக்குற்றுச் செயன் மறவாத வகையமைச்சர் கூறினது இதுவாதலையும் அறிக அறிமரபின் பொருநர்கட் பாலும் (புறத். சூ. 20) என உரைப்பதனையும் இதனுடன் ஒப்பிட்டுக் காண்க. - 12. அறிவன் வாகை புகழ்நுவல முக்காலமும் நிகழ்பறிபவன் இயல்புரைத்தன்று. தன் புகழினை உலகோர் சொல்லுமாறு, முக்காலமும் நிகழ்பவற்றை அறிபவனின் தன்மையைச் சொல்லியது, அறிவன் வாகை ஆகும். - . . . . - - - - மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் என உரைப்பதும் இது.(தொல், புறத். சூ. 20). அறிவர் என்பார், குறுமுனி போன்றவர். - இம்மூவுலகின் இருள்கடியும் ஆய்கதிர்போல் அம்மூன்றும் முற்ற அறிதலால்-தம்மின் உறழா மயங்கி உறழினும் என்றும் - - பிறழா பெரியோர்வாய்ச் சொல். 167