பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் ஒரு மறவனது குடியையும் ஊரையும் இயல்பு மேம்பாட்டையும் எடுத்துக்கூறி, அவனது நன்றாகிய ஆண்மைத் தன்மையை நன்மைபெருகச் சொல்லியது, வல்லாண் முல்லை ஆகும். வல் ஆண்மை வலிய ஆண்மைத் தன்மை. வின்முன் கணைதெரியும் வேட்டைச் சிறுசிறார் முன்முன் முயலுகளும் முன்றிற்றே - மன்முன் வரைமார்பின் வேன்மூழ்க வாளழுவந் தாங்கி வரைமாலை சூடினான் ஊர். - 177 அரசனின் முன்னாகத் தன் மலைபோன்ற மார்பத்திடத்தே பகைவர் எறிந்த வேற்படை அழுந்த வாட்போரைத் தடுத்துப் புகழ்மாலையினைச் சூடினான், இம் மறவன். இவனுடைய ஊரானது, வில்லின் முன்னே அம்பினை ஆராயும் வேட்டைச் சிறுவர்களின் முன்னாக முன்னாக, முயல்கள் பாய்கின்ற வீட்டுமுற்றங்களை உடையதாகும். o 23. காவன் முல்லை-1 தவழ்திரை முழங்குந் தண்கடல் வேலிக் கமழ்தார் மன்னவன் காவன் மிகுத்தன்று. கரையிடத்தே தவழ்கின்ற அலையினைக் கொண்ட ஆரவாரிக்கும் குளிர்ந்த கடலினை வேலியாகவுடைய உலகத்தின் கண், மணம் நாறும் மாலையினையுடைய மன்னவனின்' பாதுகாத்தலைச் சிறப்பித்தது, காவன் முல்லை ஆகும். - பெரும்பூண் சிறுதகைப்பெய்ம்மலர்ப்பைந்தார்க் கருங்கழல் வெண்குடையான்காவல்-விரும்பான் ஒருநாள் மடியின் உலகின்மேல்நில்லா - திருநால்வகையார் இயல்பு. . . 178 பெரிய அணிகளையும், நல்லோரை வணங்கும் வணக்கத்தையும், மலரிட்டுத் தொடுத்த பசிய மாலையினையும், வலிய வீரக்கழலையும்,வெண்மையான கொற்றக்குடையினையும் உடையனான வேந்தன், நாடு காத்தல் தொழிலைச் செய்வதற்கு விருப்பமற்றவனாகி, ஒரு நாள் அளவிற்கு உள்ளம் சோம்பினனாயின், இவ்வுலகின் மேற் குடிப்பிறப்பு முதலாகிய எண்வகை இயல்புடைய சான்ற்ோரது தன்மையும் தங்காதுபோம். ೯T6ಕT೧೧5 இயல்புகள் எவை என்பது முன்னரே உரைக்கப்பட்டது.(வெண்பா.173 உரை) 24. காவன் முல்லை-2 தக்காங்குப் பிறர்கூறினும். - அத்துறைக் குரித்தாகும்.