பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்றான்! 148 - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் 26. மறமுல்லை வெள்வாள் வேந்தன் வேண்டிய தீயவும் கொள்ளா மறவன் கொதிப்புரைத் தன்று. தெளிந்த வாளினை யுடையானான வேந்தன், விரும்பின எல்லாம் கொடுக்கவும், அதனை ஏற்றுக்கொள்ளாத மறவனின் மனக்கொதிப்பினை உரைத்தது, மறமுல்லை ஆகும். மறவன் கொள்ளாது கொதித்து நின்றது, பகைவரை அழித்தற்கு எழுந்த சினமொன்றே அவன்பால் மிக்கெழுந்து நின்றதனால், - வின்னவில் தோளானும் வேண்டிய கொள்கென்னும் கன்னவில் திண்டோட் கழலானும்-மன்னன்முன். ஒன்றான் அழல்விழியான் ஒள்வாள் வலனேந்தி நின்றான் நெடிய மொழிந்து. - 181 வில்பொருந்திய தோளினையுடைய மன்னவனும், நீ விரும்பினவற்றைக் கொள்வாயாக’ என்று சொல்லா நிற்கும்; மலையொத்த திண்ணியதோள்களையும் வீரக்கழலையும் உடைய மறவனும், அங்ங்ணம் கேட்கின்ற மன்னனின் முன்பாக வேண்டிப் பெறுவதற்குப் பொருந்தமாட்டான்; அழல் தெறிக்கும் விழியினனான அவன், தனது ஒள்ளிய வாளினை வலமாக உயர்ந்தவனாக, உயர்ந்த மறவுரைகளைச் சொல்லிய வண்ணம் பரிசிலும் பெறுதற்கு மறந்துநின்ற மறவனின், மறப்பண்பது இயல்புமிகுதி கூறினதால், மறமுல்லை ஆயிற்று. - - 27. குடைமுல்லை மொய்தாங்கிய முழுவலித்தோள் கொய்தாரான் குடைபுகழ்ந்தன்று. - பூசலைத் தடுத்த வலியினையுடைய தோளாற் சிறந்தவனும், கொய்து மட்டஞ் செய்யப்பெற்ற தாரினனுமான மன்னனது, கொற்றக் குடையினைப் புகழ்ந்தது, குடைமுல்லை ஆகும். பாடாணில் வருகின்ற குடைமங்கலத்தையும் இதனையும் கருதிவேறுபாடு அறிக.இது வாகைசூடி வீற்றிருக்கும் மன்னனது குடையினைப் புகழ்தல்; அது நாற்றிசையும் புகழ அரசுவீற்றிருக்கும் ஒருவனது குடையைப் புகழ்தல். . வேயுள் விசும்பு விளங்கு கதிர்வட்டம் - தாய புகழான் தனிக்குடைக்குத்-தோயம் எதிர்வழங்கு கொண்மூ இடைபோழ்ந்த சுற்றுக் கதிர்வழங்கு மாமலை காம்பு. 182