பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் பகைவர் நானும்படியாக, உயர்ந்தோரான்நன்குமதித்தலைக் கருதி, இன்னது செய்யேனாயின் இன்னது செய்வல் எனத் தான் கூறிய பகுதி இரண்டனுள், ஒன்றனோடே பொருந்திப் பலபிறப்பினும் பழகிவருகின்ற உயிரை அங்கியங் கடவுளுக்குக் கொடுத்த அவிப்பலி என நச்சினார்க்கினியர், ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து, தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும் என்னும் தொல்காப்பியவிதியின் உரைக்கண் கூறுவார்.(புறத். சூ. 21. உரை). இதற்கு, இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர் என்ற குறளையும் மேற்கோள் காட்டுவர் அவர். சிறந்த திதுவென்னச் செஞ்சோறு வாய்ப்ப மறந்தரு வாளமர் என்னும்-பிறங்கழலுள் ஆருயிர் என்னும் அவிவேட்டார் ஆங்கஃதால் வீரியரெய் தற்பால வீடு. . . . . . . . சிறந்தது இதுவே எனச் சொல்லிச் செஞ்சோற்றுக் கடன் தப்பாதபடி, மறத்தினைத் தருகின்ற வாட்போர் என்னும் பெரிய நெருப்பினுள்ளே, பெறுதற்கரிய உயிர் என்னும் அவியினைக் கொடுத்தார், இம் மறவர்கள் வீரத்தை உடையார் அடைதற்கான பகுதியையுடைய சுவர்க்கம் என்பதும், ஆங்கு அவ்விடத்ததே யாகும். 184 அவி'அவிப்பலி, வேள்வியுள் நெருப்பிடத்துப் பலியைச் சொரிதல் போல, வாட்போராகிய வேள்வியுள், தம் உயிராகிய அவியைச் சொரிந்தனர்' என்க. 'வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க’ என, வீரர் பலிபீடிகையில் தலையறுத்து வைத்து வேண்டுதலும் அவிப்பலி எனப்படும்.(சிலம்பு 579-86). 30. சால்பு முல்லை வான்றோயும் மலையன்ன - சான்றோர்தம் சால்புரைத்தன்று. - விண்ணினைத் தொடும் மலையினைப் போன்று தம் சால்பாலே உயர்ந்து விளங்கும் சான்றோர்களது, சால்பினது இயல்பை உரைத்தது, சால்பு முல்லை ஆகும். உறையார் விசும்பின் போல உவாமதி நிறையா நிலவுதல் அன்றிக்-குறையாத - வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ சங்கம்போல் வான்மையார் சால்பு. 185 சங்கைப்போன்று தூய்மை உடையவர்களின் அமைதி, மழையான் நிறைந்த வானத்திடத்தே விளங்கும் உவாநாள் மதியைப் போல நிறைவுடையதாக நிலவுதல் என்பதல்லாமல்,