பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாடாண் 159 فنهالا 2. கடவுள் வாழ்த்து காவல் கண்ணிய கழலோன் கைதொழும் மூவரில் ஒருவனை எடுத்துரைத் தன்று. பூமியைக் காத்தலைக் கருதிய வீரக்கழலினான வேந்தன் கைகூப்பித் தொழுகின்ற, அரி, அயன், அரன் என்னும் மூவருள். ஒருவனை உயர்த்துச் சொல்லியது, கடவுள் வாழ்த்து ஆகும். கடவுளை வாழ்த்துதலும், அக் கடவுளது அருளால் அரசன் வாழ்கவென்பதே ஆகும். அதனால், இதுவும் பாடாண் திணை ஆயிற்று. - .. வைய மகளை அடிப்படுத்தாய் வையகத்தார் உய்ய உருவம் வெளிப்படுத்தாய்-வெய்ய அடுந்திறல் ஆழி அரவணையாய் என்றும் நெடுந்தகையாய் நின்னையே யாம். 191 ஒருவரானும் அளவிட்டு உரைத்தற்கரிய தன்மையினை உடையாய்! அத்தகைய நின்னை, யாம் நிலமகளை நின் திருவடியிலே அடக்கியருளினை எனவும், உலகத்தார் உய்யும் பொருட்டாக உருவத் திருமேனியைத் தோற்றுவித்தருளினை எனவும், வெவ்விதான கொல்லும் வலியினாற் சிறந்த சக்கரப்படையாய் எனவும், பாம்பணையினைக் கொண்டாய் எனவும் சொல்லி வாழ்த்துவோம்! - - இது திருமாலை வாழ்த்தியது. வையமகளை அடிப்படுத்தாயென்றது, திருமாலின் உலகளந்த செயலினை, உருவம் வெளிப்படுத்தாய் என்றது. மேற்கொண்ட திருவவதாரங்களை இதுபோல, அயன் அரன் ஆகியோரை வாழ்த்துவனவும் வருமிடங்களும் காண்க. 3. பூவை நிலை கறவை காவலன் நிறனொடு பொரீஇப் புறவலர் பூவைப் பூப்புகழ்ந்தன்று. - ஆனிரையைக் காத்தவனான மர்யவனின் நிறத்தோடு உவமித்துக் காட்டிடத்தே மலர்கின்ற காயாம்பூவைப் புகழ்ந்தது, பூவை நிலை ஆகும். - - பூவை-காயாம்பூ, அதனைப் புகழ்தலால் 'பூவைதிலை’ மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் என, இத்துறையினை வெட்சிப் புறனடையுள் கூறுவர் தொல்காப்பியர்-(புறத். சூ. 5)