பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோய் யாவை விழுமிய யாமுணரேம்-மேவார் மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை நிறத்தொடு நேர்தருதலான். 192 அழகிய வீரக்கழலினை உடையோய்! பகைவரது மாறுபாட்டுடனே வஞ்சமல்லரது மாறுபாட்டையும் வென்ற ளமைப் பருவமுடைய மாயவனது, திருமேனியின் நிறத்தினோடேஉவமைகொள்ளுதலான்,காயாமலரும் செவ்விப் பூவைப்போல, எப்பொருள்தாம் சீரியவை? யாம் அறிகின்றிலமே! இது, திருமாலோடு அரசனை ஒப்பிட்டுக்கூறியது. இவ்வாறு பிற கடவுளரோடு ஒப்பிடினும், இந்தத் துறையேயாகும். - - 4. பரிசில் துறை மண்ணகங் காவன் மன்னன் முன்னர் எண்ணிய பரிசில் இதுவென உரைத்தன்று. பூமியிடத்தைக் காக்கும் தொழிலையுடைய மன்னனின் முன்னே, கருதிவந்த பரிசில் இதுவெனப் பரிசிலன் உரைத்தது, பரிசில் துறையாகும். - இதற்கும், பின்வரும் பரிசில் நிலைக்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல் வேண்டும். . . வரிசை கருதாதுவான்போல் தடக்கைக் குரிசில்நீ நல்கயாம் கொள்ளும்-பரிசில் அடுகளம் ஆர்ப்ப அமரோட்டத் தந்த படுகளி நால்வாய்ப் பகடு. - 193 மழையினைப்போலவழங்கும்பெரிய கையினை உடையாய்! தலைவனே! எங்கள் தரத்தினை நினையாதே நீ வழங்க, யாம் நின்பாற் பெற்றுக்கொள்ளும் பரிசில், கொல்லும் போர்க்களத்திலே ஆரவாரிக்கும்படியாகப் போரினை நிகழ்த்திப் பகைவரை ஒட்டிவிட்டுக் கைக்கொண்டு வந்த, உண்டான மதக்களிப்பினையும் நான்ற வாயினையும் உடைய, யானையேயாம்! - 'யானை, யாம் கொள்ளும் பரிசில்' என்றது இது. 5. இயன்மொழி வாழ்த்து-1 இன்னோர் இன்னவை கொடுத்தார் நீயும் அன்னோர் போல அவையெமக் கீகென என்னோரும் அறிய எடுத்துரைத் தன்று.