பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uou acesso é um teau-se is: "தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருதிய சூதர் ஏத்திய துயிலெடை நிலை என்பது தொல்காப்பியம்-(புறத். சூ.36) தமது வலியான மனக்கவற்சி இல்லாமற்படிக்குத் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர். அத்துயில் எடுப்பான் ஏத்தின துயிலெடை நிலை என்பது நச்சினார்க்கினியரது விளக்கம். இவற்றையும் இங்குக் கருதல் வேண்டும். - அளந்த திறையார் அகலிடத்து மன்னர் வளந்தரும் வேலோய் வணங்கக்-களந்தயங்கப் பூம்லர்மேற் புள்ளொலிக்கும் பொய்கைசூழ் தாமரைத் தூமலர்க்கண் ஏற்க துயில். 197 . வெற்றி தருகின்ற வேலினை உடையாய்! அகன்ற உலகிடத்துப் பிற மன்னரெல்லாம் நினக்கு இட்ட திறையினை உடையராய் வந்து வணங்கும் பொருட்டாக, இடம் விளங்கப் பொலிந்த மலர்களின் மேலே பறவையினம் ஆரவாரிக்கம் பொய்கையிற் சூழ்ந்த தாமரையின் தூய மலரினைப் போன்ற நின் தண்கள் துயிலெழுவனவாக - ஏற்க எழுக. எழுக துயிலெனவும் பாடம் பூமலர் மேற் புள்ளொலிக்கும்’ என்றது, பாசறையிடத்துப் பிறரது ஆரவாரத்தை, - - - 9. மங்கல நிலை-1 கங்குற் கனைதுயில் எழுந்தோன் முன்னர் மங்கலங் கூறிய மலிவுரைத் தன்று. - கங்குலிடத்தே கொண்டிருந்த மிக்க துயிலினை நீத்து எழுந்தோனான மன்னனின் முன்னே, மங்கலத்தைக் கூறிய மிகுதியைச் சொல்லியது, மங்கல நிலை ஆகும். விண்வேண்டின் வேறாதன் மங்கலம் வேந்தர்க்கு மண்வேண்டின் கைகூப்பல் மங்கலம்-பெண்வேண்டின் துன்னன் மடவார்க்கு மங்கலம் தோலாப்போர் மன்னன் வரைபுரையும் மார்பு. 198 பிற மன்னர்கள் கவர்க்கத்தை அடைதற்கு விரும்பினராயின், எம்மன்னனுக்குமாறுபடுதல் அவர்க்கு ஆக்கமாம்; அன்றி அவர் மண்ணாள விரும்பினராயின், எம் அரசனுக்குக் கைகூப்பிப் பணிதல் ஆக்கமாம்; பெண்மைத் தன்மையை விரும்பினால், மடவார்க்குத்தோல்வியறியாத போராற்றலுடைய எம்மன்னனது மலையொத்த மார்பினை அணைகின்ற அது ஆக்கமாம்! அவன் ஆண்மையிற் சிறந்தோன் என்பவர், பெண் வேண்டின், தோலாப்போர் மன்னன் வரைபுரையும் மார்பு துன்னல் மங்கலம் என்றனர். துன்னல்-நெருங்கி அணைதல்,