பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- புலியூர்க்கேசிகன்-பாடாண்படலம்- - 1 73 - 25. பரிசில் விடை - வேந்தனுள் மகிழ - - வெல்புகழ் அறைந்தோர்க்கு ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று. , - வேந்தன், உள்ளம் மகிழும்படியாகத் தனது வெற்றிப் புகழினைச் சொல்லிவந்த பரிசிலர்களுக்குப் பரிசில்களைக் கொடுத்து, அவர்தம் சுற்றத்தோடும் சென்றடைந்து இன்புறுமாறு விடுத்தது, பரிசில் விடை ஆகும். . . . . . . - பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி, நடைவயிற்றோன்றும் இருவகை விடையும் என்பர் தொல்காப்பியர்-(புறத். சூ.36) இந்த விடை, தலைவன் தானே விடுத்தலும், பரிசிலன் தானே போகல் வேண்டும் எனக் கூறி விடுத்தலும் என இருவகையாம். படைநவின்ற பல்களிறும் பண்ணமைந்த தேரும் நட்ைநவின்ற பாய்மாவும் நல்கிக்-கடையிறந்து முன்வந்த மன்னர் முடிவணங்குஞ் சேவடியாற் பின்வந்தான் பேரருளி னான். 214 - பெரிதான அருளினை உடையவனான வேந்தன், படையின் கண் பயின்ற களிறுகளையும், பண்ணுதல் அமைந்த பொற்றேரினையும், தாளத்திற்கொத்த நடைபொருந்திய பாயும் குதிரைகளையும் பலவாக வழங்கினான். அதனுடன், தன் வாயிலைக் கடந்து, முற்படவந்த மன்னர்களது முடிபணியும் , சிவந்த தன் பாதத்தாலே நட்ந்தும், என் பின்னே வந்தான். - - பின்வந்தான் என்றது, அப்போதும் பரிசிலனைப்போகவிட இசையாத அவனது அருள்மிகுதியைக் கூறியதாம். முன்வந்த மன்னர் முடிவணங்கும் என்றதனாற், பின்வந்த மன்னர்க்கு அது வாயாது போயினதும் கூறினார். - - . . - 26. ஆள்வினை வேள்வி வினை முற்றிய கனை கழலோன் மனை வெள்வி மலிவுரைத்தன்று. - தான் மேற்கொண்ட வினையினைச் செய்து முடித்த ஆரவாரிக்கும் கழலினை உடையோன், இல்லறம் நிகழ்த்திய நிறைவைச் சொல்லியது, ஆள்வினை வேள்வி ஆகும். - ஆள்வினை-முயற்சி அது வினைமுற்றியபின் இல்லறம் ஆற்றிய சிறப்பு:மனைவேள்வி' எனச் சிறப்பிக்கப் பெற்றது. இது ஐம்புலத்தாரையும் ஒம்புதலாகிய அறவேள்வியாதலின்.