பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் ஆடல் அமர்ந்தான் அடியடைந்தார் என்பெறார் ஒடரியுண்கண் உமையொருபாற்-கூடிய சீர்சால் அகலத்தைச் செங்கண் அழல்நாகம் தாராய்த் தழுவப் பெறும். . திருநடனஞ் செய்தலைப் பொருந்தியோனாகிய சிவபிரானின் திருவடிகளையே கதியாகச் சென்று அடைந்தவர்கள் என்ன பேற்றினைத்தான் பெறமாட்டார்கள்; பரந்த செவ்வரி கருவரிகளையுடைய மையுண்ட கண்ணினளான உமையம்மையைத் தன் ஒருபாகத்தே பொருந்தியிருக்கின்ற அப் பெருமானது திருமார்பத்தைச் சிவந்த கண்ணினை உடையதால் அழலும் நாகப் பாம்பும், மாலையாகித் தழுவுகின்ற பேற்றினைப் பெறுமே! - . . 232 'என் பெறார்?' என்றது. அடைந்தவர் அனைத்தும் கருதியவாறே பெறுவர் என்பதனை உணர்த்துவதாம். 44. கைக்கிளை தண்டாக் காதல் தளரியல் தலைவன் . வண்டார் விரும்பிய வகையுரைத்தன்று. கெடாத அன்பினையும், நுடங்கும் இயல்பினையும் உடையாள் ஒருத்தி, தலைவனுடைய வளவிய மாலையினைப் பெறுதற்கு ஆசைப்பட்ட வகையினை உரைப்பது, கைக்கிளை - ஆகும். - . - கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். இதனைக் காமப் பகுதி கடவுளும் வரையார், ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் (புறத். சூ.27) என்பதனுள் வரும், ஏனோர் பாங்கினும் என்பதனுள் அடக்குவர் நச்சினார்க்கினியர். - இன்னும், பகுதி என்றதனாலே எழுதிணைக்குரிய காமமும் காமஞ்சாலா இளமையோள் வயிற் காமமும் அன்றி இது வேறோர் காமம் என்று கொள்க’ எனவும் அவர் கூறுவர். மங்குல் மனங்கவரமான்மாலை நின்றேற்குப் பொங்கும் அருவிப் புனனாடன்-கங்குல் வருவான்கொல் வந்தென் வனமுலைமேல் வைகித் தருவான்கொல் மார்பணிந்த தார். 233 மிகுகின்ற ஒழுக்கத்தையுடைய அருவிகளைக் கொண்ட நீராற் சிறந்த நாடனாகிய சோழன், முகில்கள் மனத்தைக் கவர்தலாலே மயக்கத்தைத் தருகின்ற மாலைப்போதிலே தனித்து நின்றேனுக்கு அருளுத்ற்பொருட்டு, இரவிலே வருவானோ?வந்து,