பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாடாண் படலம் - 187 என்னுடைய அழகிய முலையின் மேலாகத் தங்கித், தன் மார்பிடத்தே அணிந்திருக்குந்தாரினையும் எனக்குத் தருவானோ? தாரானாயின் யான் காமந் தாழாது அழிந்தே போவேன்' என்பது குறிப்பு. மங்குல்-சிறுதுவலை. தூற்றும் கார் என்பது பழைய உரை - - * * * - 45. பெருந்திணை பெய்கழல் பெருந்தகை பேணா முயக்கிவர்ந்து மல்கிருட்செல்வோள் - வகையுரைத்தன்று. - இட்ட வீரக் கழலினையும் மிக்க தலைமையினையும் உடையவன், தன்னை விரும்பாத தழுவுதலை விரும்பியவளாக, மிக்க இருட்காலத்தே, அவனை நாடிச்செல்பவளது தன்மைய்ைச் - சொல்லியது, பெருந்திணை ஆகும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். - - வயங்குளைமான் தென்னன் வரையகலந்தோய இயங்கா இருளிடைச் செல்வேன்-மயங்காமை ஒடரிக் கண்ணாய் உறைகழிவாள் மின்னிற்றால் மாட மறுகின் மழை. , 234 செவ்வரி கருவரி படர்ந்த ജ്ഞിക്ക് ೭೧–urb! விளங்கும் தலையாட்டத்தால் அழகுபெற்ற குதிரையினை யுடைய பாண்டியனது, வரைபோன்ற மார்பத்தைத் தழுவும் பொருட்டாக, ஒருவரும் நடக்கத் தகாத இருளிடத்தே செல்வேன்; அப்படிச் செல்லும் யான் மயங்காமற் பொருட்டு, மாடங்களான் மிக்க தெருவிட்த்தே, உறை நீக்கின வாளினைப் போல, மேகமும் மின்னலிட்டது. - 'இயங்கா இருளிடை, மயங்காமை மழை மின்னலிடத் தென்னன் வரையகலந் தோயச் சென்றனள்’ எனலால், பெருந்திணை ஆயிற்று. 46. புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு வில்லேர் நுதலி விறலோன் மார்பம் - புல்லேம் யாமெனப் புலந்துரைத் தன்று. விற்போன்ற அழகிய நுதலினை உடையவள் ஒருத்தி, வெற்றியாளனர்கிய தலைவனின் மார்ப்கத்தைப் புல்லேம் யாம்' , என்று ஊடிச் சொல்லியது, புலவி பொருளாகத் தோன்றிய ,

பாடாண் பாட்டு ஆகும். . -