பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. .188 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் - மலைபடு சாந்தம் மலர்மார்பயாம்நின் பலர்படி செல்வம் படியேம்-புலர்விடியல் வண்டினம் கூட்டுண்ணும் வயல்சூழ் திருநகரில் கண்டனம் காண்டற் கினிது. 235 மலையகத்தே உண்டான சந்தனத்தையுடைய அகன்ற மார்பனே! பரத்தையர் பலரும் படிகின்ற நின்னது செல்வத்திடத்தே யாமும் இனிப் படியேம்; பொழுது புலர்கின்ற விடியற்காலத்திலே, வண்டினங்கள் புணர்ந்து நுகரும் வயல்கள் சூழ்ந்த செல்வமிக்க நகரினிடத்தே, அதனை யாம் கண்டனம்; நோக்குதற்கு அது இனிதாயும் இருந்தது! 'காண்டற்கு இனிது’ என்றது இகழ்ச்சிக் குறிப்பு. வண்டினங்கள் கூட்டுண்ணும் வயல்சூழ் திருநகரில் என்றது, குறிப்பால் தலைவனது பரத்தைமையைச் சுட்டிக் கூறியது, காண்டற்கு இனிதாய காட்சியைக் கண்டனம் எனினும் ஆம் செல்வம் என்றது, தலைவனது மார்பிடத்துப் பெறும் முயக்கத்தினை - - - - 47. கடவுள் மாட்டுக் கடவுட்பெண்டிர் நயந்த பக்கம் இமையா நாட்டத்து இலங்கிழை மகளிர் - அமையாக் காதல் அமரரை மகிழ்ந்தன்று. இமையாத கண்ணினையும், ஒளியிலங்கும் அணிகலன் களையும் உடையவரான தெய்வ மகளிர், ஆராத காதலையுடைய அமரர்களை விரும்பியது, கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம் ஆகும். காமப் பகுதி கடவுளும் வரையார், ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் என்னும் தொல்காப்பிய விதியுள் (புறத். சூ.28) இது அடங்கும். - - . - நல்கெனின் நாமிசையாள் நோமென்னும் சேவடிமேல் ஒல்கெனின் உச்சியாள் நோமென்னும்-மல்கிருள் ஆடல் அமர்ந்தாற்கரிதால் உமையாளை - ஊடல் உணர்த்துவதோர் ஆறு. - 236 'அருள் செய்க என்று சொல்லின், நும் நாமேல் இருப்பாளாகிய சொன்மகள் நோவுபடும் என்பள்; சேவடிமேல் வணங்குவேன்’ என்று கூறின், தும் தலையுச்சியிலே உள்ளாகிய நங்கையாள் நோவுபடும் என்பள் ஆகலின், மிக்க இருளிடத்தே திருக்கூத்தினை விரும்பியோனான இறைவனுக்கு, உமையாளை ஊடல் உணர்த்துவதென்னும் ஒருவழி, காண்டற்கு அரியதா யிருந்தது. . இறைவனையே பிரமனாகவும் கூறினமை காண்க