பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் உயர்ந்த பாண்டியன் அவன், கொடியாற் சிறந்த தன் தேர்ப்படை பகைப்படையினை வருத்துங் காலமாகிய போர்க்காலத்தே வீர வலயம் பொலிந்த தோளினையுடையவரான போர் மறவர்கள் தும்பை மாலையினைச் சூடாநிற்பத், தான் புகழ்தல் அமைந்த வேம்பின் பூக்கொத்தினைச் சூடா நிற்பான். 3. ஆர் விறற்படை மறவர் வெஞ்சமம் காணின் மறப்போர்ச் செழியன் மலையூ உரைத்தன்று. வெற்றியினையுடைய படைமறவரின் வெய்ய பூசலைக் காணுமிடத்துத், தறுகண்மையுடைய பூசலைச் செய்ய வல்லவனான செழியன் புனையும் பூவினை உரைத்தது,ஆர் ஆகும். ஆர்.ஆத்திமாலை. - கொல்களிறுர்வர் கொலைமலிவாள்மறவர் வெல்கழல் வீக்குவர் வேலிளையர்-மல்கும் கலங்கல் ஒலிபுனற் காவிரி நாடன் அலங்கல் அமரழுவத்தார். 242 போர்க்களத்து நடுவே, கொலைத் தொழிலானே மிகுந்த வாள்வீரர்கள், கொல்லுதலிலே வல்ல களிற்றினை ஊர்ந்து செல்வர்; வேலேந்திய மறவர்கள் வீரக்கழலினைக் கட்டுவர்; செங்கலங்கல் மிகுதியும் உடைத்தாய், முழங்கும் புனலினைக் கொண்டுவருகின்ற காவிரிநாட்டிற்கு உரிய சோழன் சூடுவது ஆத்திமாலை ஆகும். 4. உன்ன நிலை துன்னருஞ் சிறப்பின் தொடுகழன் மன்னனை உன்னஞ் சேர்த்தி உறுபுகழ் மலிந்தன்று. கிட்டுதற்கு அரிதானநன்மையினையும், கட்டும் கழலினையும் உடைய தம் மன்னனை, நிமித்தம் பார்ப்பதற்குரிய மரத்தொடு கூட்டி, அவனது மிகுபுகழைச் சொல்லியது, உன்ன நிலை ஆகும். உன்னம்-ஒருவகை வலியமரம்."எம்மன்னன் வெல்வானாகில் நின்கோடு பூக்க என்றும், பகைவன் அழிவானாகில் நின்கோடு பட்டுப்போக என்றும் சுட்டிக்கூறி நிமித்தம் காண்பது மரபு. துன்னருந் தானைத் தொடுகழலான் துப்பெதிர்ந்து முன்னர் வணங்கார் முரண்முருங்க-மன்னரும் ஈடெலாந் தாங்கி இகலவிந்தார் நீயும்நின் கோடெலாம் உன்னம் குழை. 243