பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் அடும்புகழ் பாடி அழுதழுது நோனாது இடும்பையுள் வைகிற்றிருந்த-கடும்பொடு கைவண் குரிசில்கற் கைதொழுஉச் செல்பாண - . தெய்வமாய் நின்றான் திசைக்கு. 252 பாணனே கை வளப்பத்தினையுடைய நம் தலைவன், இப்பொழுது எட்டுத் திசைக்கும் ஒரு தெய்வமாகக், கன்மேல் நின்றான்; அதனால், அவனை இழந்தது பொறாதே, துன்பத்துள்ளே தங்கியிருந்த சுற்றத்தோடு, அழுதழுது வருந்துதலின்றி, அவன் பகைவரை ஆடுகின்ற கீர்த்தியைப் பாடினாயாக, அக் கல்லினைக் கைதொழுது மேற்செல்வாயாக. 14. இற்கொண்டு புகுதல் வேத்தமருள் விளிந்தோன் கல்லென ஏத்தினர் துவன்றி இற்கொண்டுபுக்கன்று. .. - வேந்தர் செய்தபோரிடத்தேவீழ்ந்துபட்டோனின்கல் இது வென வாழ்த்தினராய்த் திரண்டு, கோயில் எடுத்துப் புக்கது, இற்கொண்டு புகுதல் ஆகும். . இற்கொண்டு, அதனுள் ஏத்தினார் புகுதல்’ என்று கொள்ளுக. சீர்த்தகு பெரும்படை’ (புறத். சூ. 5) எனத் தொல்காப்பியம் கூறுகின்ற பெருஞ் சிறப்புகளைப் படைத்தலும், இற்கொண்டு புகுதலும் ஒன்றாகும். . . . . வாட்புகா ஊட்டி வடிமணி நின்றியம்பக் கோட்புலி அன்ன குரிசில்கல்-ஆட்கடிந்து - விற்கொண்ட வென்றி விறன்மறவர் எல்லோரும் இற்கொண்டு புக்கார் இயைந்து. 253 பகையரசரதுதானைவீரரை ஒட்டி, வில்லாற்றலாற்கொண்ட - வெற்றியினையுடைய திறல்வீரர் எல்லோரும், கொல்லும் புலியையொத்த தலைமையுடையானது கல்லினை, அதற்குக் கோயில் எடுத்து, வாளுக்கு உணவு கொடுத்துத், தெளிந்த மணியோசை நிலையாக ஒலிக்கக் கூடி, அக் கோயிலிலுள்ளும் புகுந்து போற்றுவாராயினர். ". புகா உணவு வாட்புகா,என்றது பலியினை - - - தொகுத்து உரைத்தல் பொதுவியற் படலத்துள் முதலாவதான பொதுவியல் என்னும் இப் பகுதி, பன்னிரண்டு துறைகளைக் கொண்டதாகும். அவை- - - - o . . . . . .