பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்ட்பொதுவியற்படலம் 209 தம் மன்னர் இறந்தானாக, அது குறித்து, அகன்ற நிலத்தின்கண் உள்ளார் இரங்கினும், அந்தப் பூசன்மயக்கு என்றே, ஆராய்ந்த அறிவினையுடையோர் சொல்வார்கள். எண்ணின் இகல்புரிந்தோர் எய்தாத தில்போலும் கண்ணினொளிர் வேலான் சுரந்தபின்-அண்ணல் புகழொடு பூசன் மயங்கிற்றால் பொங்கும் அகழ்கடல் வேலி யகத்து. 260 கண்ணிடத்தே ஒளியெறிக்கும் வேற்படையினை உடையான் நம் மன்னன். அவன் பொருகளத்தே இறந்ததன் பின்னர், மிகாநின்ற அகழ்ந்த கடலினை வேலியாகவுடைய இப் பூமியினிடத்தே, ஆரவாரமெல்லாம், அத் தலைமையாளனின் புகழொடு கூடியவாகத் தலைமணந்தது;ஆதலான். ஆராயின், போரினை விரும்பிய வீரர்கள் பெறாத பேறுதான் ஒன்றுமில்லை போலும்! புகழினை உலகிலே நிலைநிறுத்தியதனால், அவன் பெறக் கடவ பேறுகளைப் பெற்றானாயிற்று; அத்தகைய புகழுடை யானும் மாய்ந்தான் என நிலையாமையும் கூறப்பட்டது. - 22. மாலை நிலை ^ கதிர்வேற் கணவனொடு கனையெரி முழுக மதியேர்நுதலி மாலைநின்றன்று. இறந்துபட்ட, கதிர்த்த வேலினாற் சிறந்த தன் கணவனொடு, தரனும் செறிந்த நெருப்பிடத்தே முழுகுதற்குப் பிறையையொத்த நெற்றியினை உடையவள், மாலைக் காலத்தே மனம் பொருந்தி நின்றது, மாலைநிலை ஆகும். இதனைப் பாலைநிலை என உரைத்து, 'நல்லோள் கணவனொடு நனயழற் புகீஇச், சொல்லிடையிட்ட பாலை நிலையும்’ (புறத். சூ. 24) என்பர் தொல்காப்பியர். அவனொடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு உறழ்ந்து மனைவி கூறிய புறங்காட்டு நிலையும் என நச்சினார்க்கினியர் விளக்கம் உரைப்பர். . . சோலை மயிலன்னாள் தன்கணவன் சொல்லியசொல் மாலை நினையா மனங்கடைஇக்-காலைப் புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள் அகையழல் ஈமத் தகத்து. - 261 சோலையிடத்தே வாழ்கின்ற மயிலைப்போன்ற சாயலினை உடையவள் ஒருத்தி, அவள், தன் கணவன் சொல்லிய சொற்களை