பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 214 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் நின்று நிலமிசையோர் ஏத்த நெடுவிசும்பில் சென்று கழிந்தான் செருவெய்யோன்-என்றும் அழலுங் கதிர்வேல் அவன்புகழ் பாடி உழலும் உலகத் துயிர். - - 268 . போரினை விரும்புவோனாகிய நம் தலைவன், உலகிலுள்ளோர் நிலையாகத் தன்னைப் புகழ, நெடிதான விசும்பிடத்தேதானும் சென்றனன்; உலகத்தே உளவான உயிர்கள், எரியும் கதிர்த்த வேலினை ஏந்தியோனாகிய அவனது புகழினைப் பாடியவாக, இனி, எந்நாளும் சுழலா நிற்கும். சென்று கழிந்தான், ஒரு சொல்; 'சென்றான்’ என்பது பொருள். உலகனைத்தும் புரந்து வாழ்ந்த ஒருவன் மாய்ந்தனனே' என இரங்கிய கையறுநிலை இது. தொகுத்து உரைத்தல் பொதுவியற் படலத்துச் சிறப்பிற் பொதுவியற் பாலவாக அமைந்த துறைகள் இதுவரை உரைக்கப்பட்டன. அவை: காட்டிடத்தே கணவனை இழந்த மடந்தையது தனிமைத் துயரைச் சொல்லும் முதுபாலையும்; சுரத்திடையே தன் காதலியை இழந்த கணவனது நிலையைக் கூறும் சுரநடையும்; மனைவியை இழந்த கணவனது நிலையை யுரைக்கும் தபுதார நிலையும்; கணவனை இழந்து கைம்மை பூண்டவளின்நிலையைக் கூறும் தாபத நிலையும்; - தன் கடன் முடித்த பின், தாய் இறந்தது கூறலான தலைப்பெயல் நிலையும், குலமுதலாகிய செல்வன் மறைந்த்ான் எனச் சுற்றம் பூசலிடலும், வேந்தன் இறந்தானென நாட்டவர் வருந்துதலும் ஆகிய பூசன் மயக்கும்; - - இறந்த கணவனோடு எரிமூழ்கக் கருதிய மனைவியது. மாலைக்காலத்து நிலையினை உரைத்தலாகிய மாலை நிலையும் கணவனோடு எரிமூழ்குவாளைக் கண்டோர் வியந்து கூறுதலும், கடுவினையாளன் ஒருவன் பகைவரது கணைபட்டுத் தன் செயல் முடியானாக, வீழக் கண்டோர் கூறுதலுமான மூதானந்தமும்; கணவனது புண்ணினைப் பேணியிருக்குமவள், தோன்றிய விரிச்சியும் சொகினமும் மாறுபட நடுங்கியதும், போரினை மேற்கொண்டு செல்வான் ஒருவனைக் கண்டோர் விரிச்சியும் சொகினமும் மாறுபடக் கண்டு உரைத்தலும் ஆகிய ஆனந்தமும்; கணவன் இறந்துவிட அவனுடன் அக்கணமே உயிர் விடாத - தன் நிலைமை குறித்து இரங்கிய மனைவியது நிலையான - ஆனந்தப் பையுளும்; மன்னன் மாய்ந்தானாக அவனைச்