பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் கைக்கிளைப்படலம் 229 கல்லருவியாடிக் கருங்களிறு காரதிரும் மல்லலஞ் சாரன் மயிலன்ன-சில்வளைப் பலவொலி கூந்தலைப் பயந்தோர் நிலவரை மலிய நீடுவாழியரோ! - 289 மலையருவியிலே நீராடிக் கரிய களிற்று யானைகள் மேகங்களைப் போல முழங்காநிற்கும் வளப்பத்தையுடைய, அழகிய மலைப்பக்கத்தே, சில தொடியினையும் பல பகுதியாய்த் தழைந்த கூந்தலையும் உடையாளாய் மயில்போன்று நின்றாளைப் பெற்றோர், பூமியெல்லையிலே நெடுங்காலம் வளம்பெருக வாழ்வாராக! கார் அதிரும்காரினது இடியொலியினைப் போல முழங்கும். ஒலி கூந்தல்-தழைத்த கூந்தல். - - 6. நலம் பாராட்டல் அழிபடர் எவ்வம் கூர ஆயிழை பழிதீர் நன்னலம் பாராட் டின்று. - மிகுதியாகப்படருகின்ற காமத்துன்பமானது பெருகா நிற்ப, ஆராய்ந்த அணிகளை உடையாளது, குற்றமற்ற நல்ல அழகினைப் பாராட்டியது, நலம் பாராட்டல் ஆகும். - அம்மென் கிளவி கிளிபயில ക്ട്രിബ്യൂ கொம்மை வரிமுலை கோங்கரும்ப-இம்மலை நறும்பூஞ் சார லாங்கண் - - - குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங்கண்ணே. 290 இவளுடைய அழகிய மெல்லிதான வார்த்தையைக் கிளி பழகா நிற்பத், தெரிந்த அணிகளை உடையவளான இவளது குவிந்த அழகிய முலைகளைக் கோங்க மரங்கள் அரும்புதலைச் செய்ய, இந்த மலையிடத்து, நறுமலர்களையுடைய இந்தச் சாரலிடத்தேயுள்ள சிறுசுனைக் குவளையிடத்தே, இவளது மிகப்பெரிய கண்களும் மலர்ந்துள்ளனவே! சொல்லையும், முலைகளையும், கண்களையும் வியந்து அவற்றது அழகினைப் பாராட்டியது இது - - - 7. நயப்புற்றிரங்கல் கொய்தழை யல்குல் கூட்டம் வேண்டி எய்துதல் அருமையின் இறப்பப் புகழ்ந்தன்று. கொய்த தழையாடையினை அணிந்த அல்குல் தடத்தினை - உடைய தலைவியது கூட்டத்தினை விரும்பி, அதனை அடைதல்