பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இவளுடைய அழகிய நெற்றியும் வேர்வை அரும்பும் இவள் அணிந்துள்ள தேனையுடைய மலர்மாலையும் வாடும்; இவளது சிவந்த அடிகளும் பெரிய நிலத்திடத்தே பொருந்தும் இவளின் செவ்வரி கருவரி பரந்த நீண்ட இமையினையுடைய கண்களும் இமைக்கும்; ஆகலான், இவள், இந்த அகன்ற பூமியிடத்து மானிடமகளாகிய ஓர் அணங்கே ஆகும். - வேர் அரும்புதல் முதலாயின அடையாளங்களால், மானிட மகள் எனத் துணிந்தான்; தேவமகள் ஆயின், இவை தோன்றா என்பதும் அறிக. . . . 4. உட்கோள் இணரார்கோதையென் நெஞ்சத்திருந்தும் உணராள் என்னையென வுட்கொண் டன்று. கொத்து நிறைந்த மால்ையினை உடையவள், என் நெஞ்சிடத்தே நிறைந்துருந்தும் என்னை அறியாளாயினள் எனத், தன் உள்ளத்திலே தலைவன் கருதுவது, உட்கோள் ஆகும். என்னை உணராள் என்றது, என் ஆராத காம விருப்பினை அறியாள் என்றதாம். கவ்வை பெருகக் கரந்தென் மனத்திருந்தும் - செவ்வாய்ப் பெருந்தோள் திருநுதலாள்-அவ்வாயில் அஞ்சொல் மாரிபெய் தவியாள் நெஞ்சம் பொத்தி நிறைசுடும் நெருப்பே. 288 சிவந்த வாயினையும், பெரிய தோளினையும், அழகிய நுதலினையும் உடையவள், ஆரவாரம் மிக மறைந்து என் நெஞ்சத்தே இருந்தும், தனது அழகிய வாயினது அழகிய சொன்மாரியாகிய மழையைச் சொரிந்து,என்நெஞ்சிடத்தே மூடி என் நிறையுடைமையைச் சுடுகின்ற இந்தக் காம நெருப்பினை, அவியாள் ஆயினளே! உட்கோளாவது, இவளை அடைவோம் என்பதனை உள்ளத்தே உறுதி கொள்ளுதல். - 5. பயந்தோர்ப் பழிச்சல் இவட்பயந் தெடுத்தோர் வாழியர் நெடிதென அவட்பயந் தோரை ஆனாது புகழ்ந்தன்று. - 'இந்த மடவாளைப் பெற்றெடுத்தவர் பெரிதும் வாழ்வாராக என, அவளைப் பெற்றோரை அமையாது புகழ்ந்தது, பயந்தோர்ப் பழிச்சல் ஆகும். எடுத்தல்-வளர்த்தல். - ෆු