பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் ຂ-ເທກ. மிகுதியான நலத்தினைப் பாராட்டி, வளைந்த பனைமடலினாலே குதிரை போலப் பண்ணி அதன்மேல் ஏறிக்கொண்டவனாக, இந்தத் துயரோடு யான் வருந்தும்படியாக இன்று ஐங்கணையான் தன் வெற்றிக் கொடியினை எடுத்தானாம் என்பான் ஒருவன். படர்-துன்ப நினைவுகள், ஐங்கணையான்-காமதேவன். 22. தூதிடையாடல் ஊழிமலை உறுதுயர் நோக்கித் தோழி நீங்காள் தூதிடை ஆடின்று. ஊழிக் காலத்தைப் போல விளங்கும் மாலைக் காலத்திலே தலைவி அடைந்ததுயரத்தினை நோக்கி, அவளைவிட்டுநீங்காதே இருப்பவளான தோழி, தூதுபோகுந் தொழிலை மேற்கொண்டு, தலைவியைத் தனியே விட்டுச் சென்றது, துதிடையாடல் ஆகும். வள்வாய்ந்து பண்ணுக திண்தேர் வடிக்கண்ணாள் ஒள்வாள்போல் மாலை உயல்வேண்டும்-கள்வாய தாதொடு வண்டிமிரும் தாம வரைமார்ப தூதொடு வந்தேன் தொழ. 327

  • தேனைத் தன்னிடத்தேயுள்ள மலரினொடு வண்டினம் ஆரவாரித்திருக்கும் மாலையினை யுடைய, மலைபோன்ற மார்பத்தைக்கொண்ட தலைவனே! நின்னைக் கண்டு தொழுதலின் பொருட்டாகத்துதுரைக்கும் பணியொடுவந்தேன்; ஒள்ளிய வாளினைப் போன்ற கொடிதான இம் மாலைப் பொழுதினிலே, மாவடுப் பிளவைப் போன்ற கண்ணினை உடையவளான நின் தலைவி பிழைத்தல் வேண்டும்; அதனால், வாரினை ஆராய்ந்தாயாக நின் திண்மையான தேரினையும் இன்னே பண்ணுறுத்துவாயாக

தேரினைப் பண்ணுறுத்தல்-செல்கைக்குத் தயாராக வேண்டுவனவற்றைச் செய்தல், வடிக்கண்-மாவடுவின் பிளப்புப்போன்ற கண். 23. துயரவற்குரைத்தல் மான்ற மாலை மயிலியல் வருத்தல் தோன்றக் கூறித் துயரவற் குரைத்தன்று. மயங்கிய மாலைக் காலமானது மயில்போன்ற இயலினை உடையாளான தலைவியை வருத்துதலைத், தலைவன் அறியும் படியாகச் சொல்லித், தலைவியது துயரத்தை அவனுக்குச் சொல்லியது, துயரவற்குரைத்தல் ஆகும். உள்ளத் தவலம் பெருக ஒளிவேலோய் எள்ளத் துணிந்த இருள்மாலை-வெள்ளத்துத்