பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

q0ogiâ €ಹಕಿಹ6T # ೧೧LL u-೧ುಹಿ 19 - 15. புலனறி சிறப்பு வெம் முனைநிலை உணர்த்தியோர்க்குத் தம் மினுமிகச் சிறப்பீந்தன்று. வெவ்வியவேற்றுப்புலத்தினது தன்மையினைச் சென்றறிந்து வந்து அறிவித்தவரான ஒற்றருக்குத் தம்முடைய பங்கினும் காட்டிற் மிகுதியான சிறப்புக் கொடுப்பது, புலன் அறி சிறப்பு ஆகும். - ஒற்றி அறிந்து வந்து அறிவித்த அந்தச் செவ்வியைக் கருதிச் செய்யப்படுவதனால், புலனறி சிறப்பு எனப்பட்டது. இறுமுறை எண்ணா திரவும் பகலும் - செறுமுனையுட் சென்றறிந்து வந்தார் - பெறுமுறையின் அட்டுக் கனலும் அயில்வேலோய் ஒன்றிரண்டு - இட்டுக் கொடுத்தல் இயல்பு. 17 பகைவரைக் கொன்று, மேலும் சினத்தாற் கொதிப்புறுகின்ற கூரிய வேலினைக் கொண்டுள்ளோனாகிய தலைவனே! தாம் சாதலும் நேருமென்பதனை எண்ணாதவராக, இரவும், பகலும் பகைவரது போர்முனையுள் அவரறியாதவாறு சென்று, அவரது நிலையினை அறிந்து வந்தவர்கள் இவ்வொற்றர்கள். ஆதலின், அனைவரும் பெறுகின்ற பங்கினது முறைமையின் மேலாக இவருக்கு ஒன்றோ இரண்டோ ஏற்றிக் கொடுத்தலே இயல்பு உடையதாம். , - 'ஒற்றரின் உளவறிந்து வந்து கூறிய தன்மையினாலேயே வெற்றி வாய்ப்பது எளிதாகுமாதலின், அவருக்குப் பிறரினும் அதிகப்படியாக வழங்குவது இயல்பு' என்பது இதனிடத்து உரைக்கப்பட்டது. இதனைப் பாதீட்டினுள் கொள்வர் தொல்காப்பியர். வேய்த்துறையினைமுற்றிய ஒற்றருக்குச் செய்யும் சிறப்பு இது. - 16. பிள்ளை வழக்கு பொய்யாது புள்மொழிந்தார்க்கு வையாது வழக்குரைத் தன்று. - நிமித்தம் பொய்யாகிப் போகாதவாறு அறிந்து சொன்னவர் களுக்குப், பாக்கி வையாது கொடுக்கின்ற முறைமையினைச் சொல்வது, பிள்ளை வழக்கு ஆகும். . . . - 'பிள்ளை' என்பது காரி என்னும் பறவை, அதன் குரலினது தன்மையினை அறிந்து உரைப்பது புள் மொழிதல் ஆகும். 'கரும்பிள்ளை நிமித்தம் கூறியார்க்கு விதந்து கொடுத்தல் என்று இலக்கண விளக்கமும் இதனைக் கூறும்.