பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HయLiట&తీత__ులుతీLు_ 53 கரும்பொடு காய்நெற் ടങ്ങിയി توانایی . பெரும்புனல் வாய்திறந்த பின்னும் - சுரும்பின் தொகைமலிந்த தண்குவளைத் தூமலர்த் தாரான் பகைமெலியப் பாசறையு ளான். - - 56 வண்டுகளின் கூட்டம் மிகுதியாக மொய்த்திருக்கின்ற, குளிர்ந்த குவளையின் துய மலர்களாலான தாரினை உடையோனான வஞ்சிவேந்தன், பகைவர்கள் வலியழிந்து மெலியுமாறு, அவர்களது கரும்பொடு காய்நெற் பயிர்களையும் முழங்கும் எரியினை யூட்டி அழித்தும், பெரிதான நீர்நிலைகளை உடைத்தும் அழிவுசெய்த பின்னரும், பாசறையின்கண் இருக்கின்றானே! - - - - உணவும் உண்ணுநீரும் கெடும்படி பகைநாட்டை வலிதொலைத்துப் பகைவரைப் பணியச் செய்த பின்னரும் பாசறையிலிருப்பது, அவற்றானும் தான் கொண்ட சினம் தணியாமையினாலே என்று கொள்க. காய்நெல்-காய்த்த பருவத்திலிருக்கும் நெற்பயிர். - 21. பெரு வஞ்சி முன் அடையார் வளநாட்டைப் பின்னரும் உடன்று எரிகொளிஇயன்று. . . பகை மன்னர் வலியழிந்துபோயின நிலையினும், தன் முன்னே வந்து பணிந்து சேராதாராக, அவரது வளமிக்க நாட்டினைவஞ்சிவேந்தன்பின்னரும் கோபித்தவனாக, எரியூட்டி அழிப்பது, பெருவஞ்சி ஆகும். - வஞ்சிசூடிச் சென்ற செயலில் வெற்றி கண்ட பின்னரும், பெருஞ்சினத்தால் இச்செயல் செய்யப்படுவதனால், பெருவஞ்சி ஆயிற்று. பின்னரும் என்றது, முன்னரே உழபுல வஞ்சி'யில் உரைத்தாற்போல எரியூட்டியமையின், பீடுலா மன்னர் நடுங்கப் பெரும்புகை ஊடுலாய் வானத் தொளிமறைப்பு-நாடெலாம் பின்னும் பிறங்கழல் வேய்ந்தன பெய்கழற்கால் மன்னன் கனல மறம். - 57 காலிலே இட்ட வீரக்கழலினையுடைய வஞ்சி வேந்தனது சினமானது மேலும் மூள்கையினாலே, பெருமைபரந்த பகைமன்னர்கள் நடுங்குமாறும், பெரிய புகைப்படலமானது வானத்து ஊடேயும் எழுந்து ஞாயிற்றினது ஒளியினை மறைக்குமாறும், பகைவரது நாடுகள் எல்லாம் பின்னரும், மிகுதியான நெருப்பாலே மூட்ப்பட்டவாயின.