பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் : காஞ்சிப் படலம் . . 67. அவ்விடத்தேயே விட்டு விட்டால்தான் என்ன? ೨|ುಖ5, காஞ்சிவேந்தன் அதற்கு விலையிட்டு வழங்கி மதித்தால்தான் என்ன? - . . . . தலையினைக் கண்டு அதனையுடையனான வீரனது மறமேம்பாட்டை உரைத்தலால் தலைக்காஞ்சி ஆயிற்று. - விலையிடல், அத் தலைக்கு உரியானின் சுற்றத்தார்க்கு அரசன் பரிசளித்து, அவன் செயலைப் போற்றுதல் இட்டுரை புகழ். தலைகண்டு உரைத்தலால்', உடல் துணிபட்டு உருக் காண முடியாத போர்ப்புண்களால் சிதைந்துபோயிருந்ததும் விளங்கும். . 11. தலை மாராயம் தலைகொடுவந்தான் உண்மலியச் சிலையுடைவேந்தன் சிறப்பீந்தன்று. வீரமறவனது தலையினைக் கொண்டு வந்தானது உள்ளம் மகிழ்வினாலே நிரம்புமாறு, வில்லினையுடையனான காஞ்சி வேந்தன், அவனுக்குச்சிறப்பினைத் தருவது.தலைமாராயம் ஆகும். உவன்றலை யென்னும் உறழ்வின்றி யொன்னார் . இவன்றலையென்றேத்தவியலும்-அவன்றலை தந்தாற்கு நல்கல் வியப்போ கிளந்தேத்தி . வந்தார்க் குவந்தீயும் வாழ்வு. - . 72 பகைவரும், உவன் தலை' என்று குறிப்பிட்டு இகழுகின்ற மாறுபாடில்லாமல் இவனே தலைமையானவன் என்று சொல்லிப் புகழாநிற்ப நடக்கும் மறவன் அவன். அத்தகைய மறவனது தலையினைக் கொணர்ந்துதந்தான் இவன்.அப்படித்தந்தவனுக்கு, மிகப் புகழ்ந்து வந்தார்க்கு உவப்புடன் கொடுக்கும் வாழ்வாகிய செல்வத்தினை, வேந்தனும் கொடுத்தான். இப்படிக் கொடுத்தல்தான் ஒரு வியப்பாகுமோ! 'அம்மறவனது போராண்மையைக் கிளந்தேத்தி வந்தார்க்கே வாழ்வு ஈயும் வேந்து, அவன் தலையினையே தந்தானுக்குச்சிறப்புச் செய்தல் வியப்போ? எனக் கண்டோர் கூறுவது இது. தலைக்கு அரசன் அளித்த சிறப்பினைக் கூறுதலால் தலைமாராயம் ஆயிற்று. மாராயம், அரசனாற் செய்யப் பெறுகின்ற சிறப்பு வியப்பன்று' என்பதும், அதுவே வேந்தனது கடமை என்பதும் குறிப்பாக உணர்த்தப் பெற்றன. . - 12. தலையொடு முடிதல் மண்டமருள் மாறாமைந்திற் கொண்டான் தலையொடுகோல்வளை முடிந்தன்று. -