பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் பகைவர்கள், எரிதலைச் செய்யும் மாறுபாட்டினையுடைய அரணிடத்தைக் கொள்ளுதலின் பொருட்டாகக் கிடுகுப்படை பலவற்றையும் வென்று எதிர்ந்தாராக, மதிலிடத்தின் மேல் நின்றவரான நொச்சி மறவர்கள், உழிஞையாரான அப்' பகைவர்கள் தம் மதிலகத்தே காலிடாதபடியாக, அழகிய ஒளியையுடைய தம் வாளினை ஒச்சிப், பிணங்கள் பெருகுமாறு அவரை வெட்டி வீழ்த்தினார். • , எரிசெய்இகல் உள்ளம் வேதலைச் செய்யும் மாறுபாடு; இது நொச்சியாரின் மனவுறுதியாலும் படையாண்மை யாலும் உழிஞையாரிடத்தே எழுந்தது என்க. பரிசை-ஒரு வகைப் படைக்கலன். - . - 8. மகண்மறுத்து மொழிதல் வெம்முரணான் மகள்வேண்ட அம்மதிலோன் மறுத்துரைத்தன்று. வெய்தான பகையினை உடையவனான உழிஞை மன்னன், நொச்சிமன்னது மகளைத் தனக்கு மணஞ்செய்து தரும்படியாக வேண்ட, அழகிய மதிலிடத்தே உள்ளோனான நொச்சியான், அதற்கிசைய மறுத்துக் கூறுவது மகண்மறுத்து உரைத்தல் ஆகும். வஞ்சி வேந்தன் மகளைக் கேட்குங்காலத்து, அதற்கிசைய மறுத்துப் போரினை மேற்கொள்ளும் காஞ்சிவேந்தனது நிலையான மகட்பாற் காஞ்சிக்கும், இதற்கும் உளதான வேறுபாட்டினை அறிக மகட்பாற்காஞ்சி அரசற்கு மட்டுமே உரியது எனவும், இது மறவர்க்கு உரியது எனவும் கூறுவர். ஒள்வாள் மறவர் உருத்தெழுந்தும்பர்நாட் கள்வார் நறுங்கோதை காரணமாக் - கொள்வான் மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக் கருங்கண்ணிவெண்கட்டிற்கால். - 94 இந்தக் கரிய கண்ணினையுடையாளது வெள்ளிய கட்டிலின் கால்கள், மேனாளிலே, தேனொழுகும் நறுமாலையினையுடைய இவளின் பொருட்டாக, இவளது இடையது அழகினை எண்ணி, இவளைக் கைப்பற்றும் நோக்கத்தொடு சினந்து போர்க்கெழுந்து, வந்தவரான ஒள்ளிய வாளையுடைய மறவரது, இளமையுடைய போர்க்களிறுகளின் கொம்புகளேயாகும்! - முன் வந்தார்போல் நீவிரும் அழிவீர்; இவனைக் கொள்ளுதலைக் கைவிடுமின் என உரைத்ததிண்மையை அறிந்து இன்புறுக. - .