பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

6

புறப்பொருள் வெண்பாமாலை

என்பது எங்ஙனம் பெண்பாற்கே உரியதாகும்? அதனால் தொல்காப்பியர் காஞ்சித் திணையின் துறைகள் இருபதனை இரண்டு பத்துக்களாகப் பிரித்தற்கு நச்சினார்க்கினியர் கூறும் காரணங்கள் பொருத்தமானவையாகத் தோன்றவில்லை.

 தொல்காப்பியர் இவ்விருவது துறைகளையும் இரண்டு வகைப் படுத்தினார் என்பதில் ஐயமில்லை, இளம்பூரணருரையில் இந்நூற்பா 77ஆவது நூற்பாவாகும். அதன் உரையில் தொடக்கத்தில் இரு தலைப் பகரக்குறிக்குள் கீழ்வருமாறு உள்ளது.
 (எனவே முதற்கூறிய பத்தும் ஒருவகையென்பதும் பிற்கூறிய பத்தும் மற்றொருவகை என்பதும் பெறப்பட்டன) (புறத். 77 இளம் உரை)
 இவ்விருபதும் நிலையாமையினைச் சொல்வன என்றாலும் முதற் கூறிய பத்தும் போரோடு தொடர்பு படுத்தி நிலையாமையினைச் சொல்வதாகும். பிற்கூறிய பத்தும் பொதுநிலையில் நிலையாமையினைக் கூறுவதாகும் என்று கொள்ளலாமா என்று தோன்றுகின்றது. முன்னுள்ள பத்திலும் 'மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை' என்ற துறை பின்னுள்ள பத்தினைப் போலப் பொதுச் செய்தியினைச் சொல்வதாகக் இருந்தாலும் பிற்பகுதியில் 'பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து' என்று ஒரு துறை வருதலால் முன்னுள்ள இதனைப் போரோடு தொடர்புடையதாகக் கொள்ளலாம். 'கழிந்தோர் ஒழிந் தோர்க்குக் காட்டிய முதுமையும்' என்பதனையும் போர்க்குரியதாகக் கொள்ளலாம். யாக்கை நிலையற்றது, இளமை நிலையற்றது என்ப வற்றை மேற்குறித்த இரண்டும் சொல்பவை. இந்த நிலையாமையினைச் சொல்லிப் போரில் ஈடுபடுத்துவது நோக்கமாகலாம். அங்ஙனம் கொள்ளின் முதற் பகுதியில் உள்ள பத்தும் போர்த் தொடர் புடையவையாகவும் பின்னர் உள்ள பத்தும் பொதுத் தொடர்புடையவையாகவும் ஆகலாம்.
 தொல்காப்பியர் சொல்லிய இருபதனுள் முற்பகுதிப் பத்தில் 'மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை' என்ற துறையினையும் 'கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை' என்ற துறையினையும் விடுத்து எஞ்சிய போர்க்குத் தொடர்புடைய எட்டினையும் புறப் பொருள் வெண்பாமாலை ஆசிரியர் அவர் கொண்ட போர்த் தொடர்