பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

ஆய்வுரை

5

தினையின் துறைகளைச் சொல்வது 79 ஆவது நூற்பாவாகும். அது இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். முதலில் உள்ள பத்தும் ஒருவகை என்பதனை,

    தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ
    ஈரைந் தாகுமென்ப... (புறத். 79, 18 இ 19 நச்)

பின்னர் உன்ன பத்தும் மற்றொருவகை என்பதனை அந்தொன்னூ' லாசிரியர் மனதிற் கொண்டு அந்நூற்பாலின் ஈற்றில்,

    பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு
    நிறையரும் சிறப்பிற் துறையிரண் டுடைத்தே (புறத்.சூ. 7935-36)

என்று கூறுறின்னர். இங்ஙனம் இரண்டு பிரிவாகக் கூறப்பெறுதற்கு நச்சினார்க்கினியர் ஒரு காரணம் கூறுவர். அது வருமாறு:-

  மேல் துறை இரண்டென்பாராகலின் இவை பத்தும் 
                                ஒரு துறையாம்
  என்றற்கும் இவை ஆண்பாற்குரிய வென்றற்கும் 
                                    ஈரைந்தென
  வேறோர் தொகை கொடுத்தார் (தொல். புறத். 
                                   சூ. 78உரை)

இதன்படி முதலிற் சொல்லப் பெற்ற பத்தும் ஆண்பாற்கே உரிய தென்பதாகும். ஆனால் இப்பத்தினுள் வரும் 'தொடாக்காஞ்சியும்' 'ஆஞ்சிக் காஞ்சியும்' ஆகிய துறைகள் பெண்பாலோடு தொடர் புடையவை என்பதனை மனதிற் கொள்ள வேண்டும். அவ்வுரையாசிரியர் பின்னுள்ள பத்தினையும் பெண்பாற் குரியதென்று கீழ் வருமாறு சொல்கின்றார்.

     "இனி வருகின்ற பத்தும் பெண்பாற்கே 
                    யுரிமையின்8 அவற்றிற்கும் 
      ஈரைந்தென்பதனைக் கூட்டி முடிக்க” 
                   (தொல்.புறத். சூத்.79 உரை)

ஆனால் பின்னுள்ள பத்தில் "காதலி இழந்த தபுதார நிலை" என்பது மனைவியினை இழந்து கணவன் வருந்துவதைச் சொல்வது. "மலர்தலை உலகத்து மரபு நன்கறியப் பலர் செலச் செல்லாக் காடுவாழ்த்து'