பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

___________

4

புறப்பொருள் வெண்பாமாலை

வஞ்சி, உழிஞை,என்று பாகுபடுத்திய மூன்று திணைகளை ஐயனாரிதனார் தன் நூலில் மேல் விளக்கிய காரணங்களுக்காக மேல்விளக்கிய முறையில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி என ஆறு திணைகள் ஆக்கினார். இவ்வகையில் கரந்தை,காஞ்சி, நொச்சி என்ற மூன்று திணைகள் தொல்காப்பியத் தினின்றும். கூடுதலாகின்றன. முன்னர்ச் சொல்லிய எட்டுத் திணைகளோடு இம்மூன்றினையும் கூட்ட வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண் எனத்திணைகள் பதினொன்றாகப் பெருகுகின்றன.

  தொல்காப்பியத்திலில்லாது புறப்பொருள் வெண்பாமாலையில்

உள்ள மற்றொரு திணை பொதுவியல் என்பதாகும். இத்திணையினுடைய அமைப்பினையும் இதனைத் தனித்திணையாக ஆக்கியதற்குரிய காரணத்தையும் பார்க்கலாம்.

  தொல்காப்பியத்திலுள்ள

காஞ்சித்திணையும் புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள காஞ்சித்திணையும் பெயரளவில் ஒன்றாக இருப்பினும் இருதிணைகளும் இரு நூல்களிலும் உணர்த்துகின்ற பொருள்கள் வேறு வேறு ஆகும். தொல்காப்பியத்தில் காஞ்சித் திணையின் இலக்கணம் வருமாறு:

  காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
  பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே (தொல்.பொருள். புறத். 78 நச்) இந்நூற்பாவின்படி நிலையாமையினைச் சொல்வது காஞ்சித் திணையாகும். புறப்பொருள் வெண்பாமாலையில்
 வெஞ்சின மாற்றான் விடுதர வேந்தன்
 காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று

(பு.வெ.மா.கொளு.61)

என்ற கொளுவின் மூலம் தன் நாட்டின்மேற் பகைவன் படையெடுத்துவர அவனுடைய படைக்கு எதிரூன்றிக் காவலிடத்தைக் காப்பதென்று கூறப்பெறுகின்றது தொல் காப்பியத்தில் காஞ்சித்