பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

புறப்பொருள் வெண்பாமாலை

தொல்காப்பியம் புறத்திணைகளை ஏழாகக் கூறுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை பனிரெண்டாக்கியுள்ளது. காஞ்சி ஒரு திணையினை அழைப்பதில் தொல்காப்பியத்திற்கும் புறப்பொருள் வெண்பாமாலைக்கும் வேறுபாடு உள்ளது.
 புறப்பொருள் வெண்பாமாலையில் பதின்மூன்றாவது பிரிவு 'ஒழிபு' என்ற ஒரு பகுதியாகும். இதனை வெட்சிப் படலம், கரந்தைப் படலம் போன்ற ஒரு படலமாகக் கொள்ளக்கூடாது. யாப்பருங்கலக் காரி கையில் உறுப்பியல், செய்யுளியல் ஆகியவற்றில் சொல்லாது விடப்பெற்றவைகளை ஒழிபியலில் அந்நூலாசிரியர் சொல்லியிருப்பது போன்று முந்திய படலங்களில் சொல்லப்பெருதவை இப்பகுதியில் சொல்லப் பெற்றிருக்கும் என்று எண்ணக் கூடாது. இந்த ஒழிபு என்ற பகுதிக்கும் உரை இருப்பினும் இப்பகுதி ஐயனாரிதனாராலே செய்யப்பெற்றிருக்குமோ என்று ஐயம் தோன்றுகிறது. முன் உள்ள பன்னிரண்டு படலங்களில் ஒவ்வொன்றிலும் அத்திணையில் துறைகளுக்குரிய கொளுச்சூத்திரங்கள் உள. அதுபோன்று ஒழிபு என்ற பிரிவில் உள்ள துறைகளுக்குக் கொளுச் சூத்திரங்கள் எவையும் இல்லை. அதனால் இப்பகுதி பிற்சேர்க்கையாக வேண்டும். அங்ஙனமாயின் இவ்வுரையும் சாமுண்டிதேவநாயகருடையதா என்ற ஐயம் எழுவதும் இயல்பேயாகும்.
 தொல்காப்பியத்தில் வாகைத்திணை நூற்பாவிற்கு யெழுதுங்கால் இளம்பூரணர் தன் உரையில் மல்வென்றி, சொல் வென்றி, பாடல்வென்றி, ஆடல் வென்றி, சூதுவென்றி, என்று பல வென்றிகளைச் சொல்கிறார் (புறம் 74-இனம்). இதுபோன்ற வென்றிகள் புறப்பொருள் வெண்பாமாலையில் வாகைத் திணைத்துறைகளிற் சொல்லப் பெறவில்லை. இவையில்லாதது இந்நூலின் சிறப்பிற்கு இழுக்காகும் என்று கருதிப் பிற்காலத்தார் இப்பகுதிக்குரிய தொகுப்புச் சூத்திரத்தையும் வெண்பாக்களையும் அவைகளின் உரைகளையும் எழுதிச் சேர்த்திருக்கலாம்.
 தொல்காப்பியர் ஒரு புறத்தினையினைச் சொல்லுங்கால் அப்புறத்திணை எவ்வகத்திணைக்குப் புறம் என்பதனைச் சொல்லி அத்டதிணை குறிக்கும் பொருளையும் சொல்வர்.