பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

ஆய்வுரை

  "வஞ்சி தானே முல்லையது புறனே
                            (தொல்.புறத்.61 நச்) 
  "எஞ்சாமண்ணசை வேத்தனைவேந்த
   னஞ்சுதகச் சென்றடல்குறித்தன்றே" (தொல்.புறத் 
                                         62 நச்)

இங்ஙனம் திணை விளக்கம் கூறிய பின்னர் அத்திணைக்கு உரிய துறைகள் தொகுத்துக் கூறப் பெறும். பு.வெ, மாலையில் ஒரு திணையினைச் சொல்லத் தொடங்கும் பொழுது அத்திணைக்குரிய துறைகளெல்லாம் தொகுத்துக் கொடுக்கப்பெறுகின்றன. பின்னர் திணையினை விளக்குகின்ற கொளு நூற்பாவும் அதற்குரிய எடுத்துக்காட்டு வெண்பாவும் இடம் பெறுகின்றன.

 துறையினைச் சொல்லுங்கால் தொல்காப்பியர் துறையின் பெயரோடு அது உணர்த்தும் பொருளையும் பல இடங்களிற் சேர்த்தே கூறுவர்.

எ.டு."தன்மதில் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும்

                                (தொல் புறத் 68) மண்ணுமங்கலம் என்ற துறையின் பெயரைச் சொல்லும் பொழுதே அது உணர்த்தும் பொருளும் கூறப்படுகின்றது. புறப்பொருள் வெண்பாமாலையில் அங்ஙனமில்லை.
 "வேற்றுப்படை வரவே, யுழுதுவித் திடுதல், 
  வாண்மண்ணுநிலையே, மண்ணுமங்கலமே 
  மகட்பாலிகலே, திறை கொண்டு பெயர்தல்
                         (பு.வெ.மர.சூத்.(6)

என்று துறைப்பட்டியலில், மண்ணுமங்கலம் என்ற துறையின் பெயர் மாத்திரம் சுட்டப்படுகின்றது. பின்னர்

    "வணங்காதார் மதிற்குமரியொடு
     மணங்கூடிய மலிபுரைத்தன்று' (கொளு. 122)

என்ற கொளுநூற்பாவில் அந்தத் துறை விளக்கத்தைக் காண்கின்றோம், இது தொல்காப்பியத்திற்கும் பு.வெ.மாலைக்கும் உள்ள வேறுபாடாகும்.