பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

10 புறப்பொருள் வெண்பாமாலை

தொல்காப்பியத்தில் உழிஞைத்திணையில் 'நீர்ச் செருவீழ்ந்த பாசியும் (புறத். 68 நச்) என்ற ஒரு துறை உள்ளது இந்த ஒரு துறையே பு.வெ. மாலையில் ஊர்ச்செரு (88) செருவிடை வீழ்தல் (89) மறனுடைப்பாசி (87) என்று மூன்று துறைகளாகின்றன. இங்ஙனம் தொல்காப்பியத்துறைகள் பு. வெ. மாலையில் சில இடங் களிற் பெருகிச் செல்வதையும் காணலாம்.

புறப்பொருள்" வெண்பாமாலையும் தொல் உரை எடுத்துக்காட்டும்

தொல்காப்பியம் புறத்திணை இயலுக்கு உரை வரைந்தவர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகிய இருவராவர். இவர்கள் தங்கள் உரைகளில் துறைகளுக்கு எடுத்துக் காட்டுக்களாகப் புறநானூறு,பதிற்றுப்பத்து முதலிய சங்கச் செய்யுள்களைக் கொடுத்துள்ளனர். அவைகளோடு புறப்பொருள் வெண்பாமாலை வெண்பாக் களையும் எடுத்துக்காட்டுக்களாகக் காட்டியுள்ளனர். இளம்பூரணர் உரையில் 78 வெண்பாக்களும் நச்சினார்க்கினியர் உரையில் 21 வெண்பாக்களும் உள. இவைகளில் 13 வெண்பாக்கள் இரு உரைகளிலும் இருவராலும் காட்டப்பெற்றவை. இப்பதின்மூன்றில் 9 செய்யுள்கள் இருவராலும் ஒரே துறைக்கு எடுத்துக் காட்டுகளாய்க் கூறப்பெற்றவை [இணைப்பு 2 (அ)]. புறப்பொருள் வெண்பாமாலையில் 83 ஆவது வெண்பா 'ஆஞ்சிக் காஞ்சி'த் துறையின் விளக்கமாக உள்ளது. அவ்வெண்பாவினை இளம்பூரணர் 'நீத்த கண வற்றீர்த்த வேலிற் பேத்த மனைவி ஆஞ்சி' என்ற துறைக்கு எடுத் துக் காட்டுச் செய்யுளாகக் கொடுப்பார். நச்சினார்க்கினியரும் தன் உரையில் அதே துறைக்கு எடுத்துக் காட்டாகத் தருவர். இங்ஙனம் இருவர் உரையிலும் இடம் பெறுபவைதான் அந்த 9 வெண்பாக்களுமாகும். எஞ்சிய 4 வெண்பாக்கள் [இணைப்பு 4)] நிலை அப்படியில்லை, புறப்பொருள் வெண்பாமாலை 227 ஆவது வெண்பா பாடண் திணையில் 'கொடிநிலை' என்ற துறைக்குரியது. இளம்பூரணர் அவ்வெண்பாவினைப் பாடாண் திணையில் 'கொடிநிலை' என்ற துறைக்கே எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார். ஆனால் நச்சினார்க்கினி யர் அவ்வெண்பாவினை அத்திணையில், 'வழக்கொடு சினவிய வகை மையான' (புறத். நச். 31) என்ற நூற்பாவிற்கு எடுத்துக் காட்டாகத்