பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

ஆய்வுரை 11

தருகின்றார் இதன் விவரங்களைப் [இணைப்பு 5 (ஆ)) பட்டியலிற் காணலாம்.

   தொல்காப்பியர் அகத்திதிணைச் செய்திகளைச் சொல்லுங்கால் ஒவ்வொருவருடைய கூற்றுகளாகச்சொல்வர். களவியவில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று என்று வரும். அதேபோன்று கற்பியலிலும் இருப்பதனைக்காணலாம். பிற்காலத்து அகப்பொருள் இலக்கணம் எழுதினோர் இந்தக் கூற்று வரிசையை விடுத்து அவ்வொழுக்கத்தினைத் தொடர் நாடகமாகக் கோவையாகச் சொல்லினர், புறத்திணையியலைப் பொறுத்த மட்டில் தொல்காப்பியர் புறத்திணைகளையும் துறைகளையும் சொல்லும்பொழுது அவைகளை அவை போரில் நிகழும் வரிசையிலேயே பெரும்பாலும் கோவையாகச் சொன்னதாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக வெட்சித்தீணையின் துறைகளைப் பார்த்தால் அப்போர் தொடங்குவதும் நடப்பதும் எம்முறையிலிருக்குமோ அவ்வரிசையிலேயே துறைகளை அமைத்துச் சொல்லியுள்ளதைக் காணலாம். படையியங்கரவம், விரிச்சி, செலவு, வேய், வேய்ப்புறம், புறத்திறை, ஊர்க் கொலை, ஆகோள் பூசல் மாற்று, நோயின்றுய்த்தல், நுவல்வழித் தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை என்று துறைகள் வரிசையாகச் செல்கின்றன.
  புறப்பொருள் வெண்பாமாலையில் தொல்காப்பியத்தை நோக்கப் புதிய திணைகளும் துறைகளும் எழுந்துள்ளன. புறப்பொருள் வெண்பாமாலையிலும் தொல் காப்பியத்திலும் பொதுவாகக் காணப் பெறுகின்ற துறைகளுக்கிடையே சில புதிய துறைகளை ஐயனாரித னார் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். ஆனால் தொல்காப்பியத்திற் சொல்லப் பெற்ற துறைகள் புறப்பொருள் வெண்பாமாலையில் இடம் பெற்ற பொழுது தொல்காப்பியத்தில் உள்ள வரிசையில் சொல்லப்பெறாது மாறியும் சொல்லப் பெற்றுள்ளன. தொல்காப்பிய உரையில் இளம்பூரணத்திலும், நச்சினார்க்கினியத்திலும் புறப் பொருள் வெண்பாமாலை வெண்பாக்கள் எவ்வரிசையில் இடம் பெற்றுள்ளன என்பது பின்னிணைப்பிலுள்ள [இணைப்பு 3 (அ) (ஆ) பட்டியலிற் காட்டப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக இளம்பூரணத்தில் வெட்சித்திணையில் புறப்பொருள் வெண்பாமாலை வெண்