பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

12. புறப்பொருள் வெண்பாமாலை

பாக்கள் 3 முதல் 20 எண்ணுள்ளவைகளில் சில வெண்பாக்கள் 3 4 5 6 7 8 9 10 13 14 15 20 ஆகிய எண்ணுள்ளவைகளில் இடம்பெற்றுள்ளன. 11 12 16 17 18 19 எண்ணுள்ளவெண்பாக்கள் எடுத்துக் காட்டப்பெறவில்லை. அவ்வெண்பாக்கள் உணர்த்தும் துறைகள் தொல்காப்பியத்தில் இல்லாமலிருக்கலாம். அத்துறைகள் இருந்தாலும் அத்துறைகளுக்குப் புறநானூறு போன்ற நூல்களிலிருந்து எடுத்துக் காட்டுக்கள் தரப்பெற்றிருக்கலாம். 3முதல் 20வரை உள்ள வெண்பாக்கள் புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள வரிசையிலேயே இளம்பூரணத்தில் காணப்பெறுகின்றன. இது எதனைக் காட்டுகிறது என்றால் இவ் வெண்பாக்களுக்குரிய துறைகள் தொல்காப்பியத்தில் எதற்குப் பின் எதுவாக வுள்ளதோ அதேபோன்று புறப்பொருள் வெண்பாமாலையிலும் அதற்குப் பின் அதாக இருக்கிறது. விளக்கிச் சொன்னால்

தொல் காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை படையியங்கரவம் வெட்சியரவம் பாக்கத்துவிரிச்சி விரிச்சி புடைகெடப்போகிய செலவு செலவு புடைகெடவொற்றினாகியவேய் வேய்

என்ற முறையில் 3 முதல் 20க்குள் வெண்பாக்களின் துறைகள் இரண்டு நூல்களிலும் ஒரே வரிசையில் இருக்கின்றன.

  வெட்சித்திணையில் மேற்கண்ட 3 முதல் 20 வெண்பாக்களுக்குரிய துறைகளுக்குப் பின்னர் வேறு சில துறைகளும் அவைகளுக்குரிய வெண்பாக்களும் வருகின்றன. அதற்குரிய காரணத் தினைப் பின்னர் பார்க்கலாம். பட்டியலில் வெட்சித்திணையில் 192 ஆவது வெண்பாவிற்குப்பின்னர் [இணைப்பு 3 (அ)] புறப்பொருள் வெண்பாமாலை வெண்பாக்கள் 25, 22, 34, 32, 28, 27, 30, என்ற வரிசையில் இளம் பூரணருரையில் உள்ளன. இவைகளை எடுத்துக் காட்டுக்களாகக் கொண்ட தொல்காப்பியத் துறைகள் தொல் காப்பிய நூற்பாவின்படி
  ஆரமரோட்டல் (25) ஆபெயர்த்துத் தருதல் (22) சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்துரைத்தல் (34) தலைத்தாள் நெடுமொழி