பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் வ - று ஒள்வாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும் புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும்-விள்வாரை மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற் கூறிட்டார் கொண்ட நிரை. இ-ள். ஒள்ளிய வாட்போரினை மேற்கொண்டோர்க்கும் ஒற்றுத் தெரிந்து சொன்னோர்க்கும் நிமித்தம் தப்பாவகை சொன்ன அறி வுடையோர்க்கும் தம்முடன் வேறுபடுவோரை மாறுபாடு கெடுத்த வெற்றியினையுடைய மறவினையாளர் தம் சீறூரிடத்துப் பங்கிட்டார். கைக்கொண்டு வந்த நிரையை எ-று. 15. உண்டாட்டு தொட்டிமிழுங் கழன்மறவர் மட்டுண்டு மகிழ்தூங்கின்று. (14) இ-ள். கட்டி ஆர்க்கும் வீரக்கழலினையுடைய தறுகண்ணர் மதுவை உண்டு மனங்களித்து ஆடியது எ-று. வ- று இளிகொண்ட தீஞ்சொல் விளமாவெயிற்றி களிகொண்ட நோக்கங் கவற்றத் தெளிகொண்ட வெங்கண் மலிய விளிவதுகொல் வேற்றார்மற் செங்கண் மறவர் சினம். இ-ள். இளியென்னும் இசையினைக்கொண்ட இனிய சொல் வினைய எயுடைய இளைய சீமதியான வேட்டுவிச்சி களிப்புக் கொண்ட பார்வை வருத்தவும் தெளிவுகொண்ட வெவ்விய கள்ளையுண்ட மகிழ்ச்சி மிகவும் கெடுவது போலும், பகைவர்மேல் சிவந்த கண்ணினையுடைய வீரர் செற்றம் எ-று. சிளம் விளிவதுகொலெனக் கூட்டுக. இஃது "ஒருமை சுட்டிய" என்பதனுள் அமைத்த, "ஏவ லிளையர் தாய்வயிறு கரிப்ப" என்பது போலாம். (15)